Thursday, November 2, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

சுப செய்திகள் வந்து சேரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல் ஆதரவு கிடைக்கும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள். கிளைத் தொழில் தொடங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம்

தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். வீடு வாங்க அல்லது விற்க உகந்த நேரமிது. தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்

உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பிரபலமானவர்களின் பின்னணியில் பிரச்சினைகள் தீரும். வீடுமாற்றம் ஊர்மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

கடகம்

உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நிறைவேறும்.

சிம்மம்

யோகமான நாள். வீண் வாக்குவாதங் களைத் தவிர்ப்பது நல்லது. அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வியாபார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

கன்னி

அந்தஸ்து உயரும் நாள். உத்யோகம், தொழிலில் இடமாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு வருவர். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும்.

துலாம்

நல்ல தகவல் இல்லம் தேடிவரும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். நீங்கள் தேடிச் செல்ல நினைத்த ஒருவர் உங்கள் இல்லம் தேடி வருவார். தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும்.

விருச்சிகம்

பாராட்டும் புகழும் கூடும் நாள். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தொகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.வி.ஐ.பி.க்களின் வருகை உண்டு. நட்பால் சில நல்ல வாய்ப்புகள் வந்து சேரும்.

தனுசு

பணப்பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். மாமன், மைத்துனர் வழி உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

மகரம்

எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். உடல் நலத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு அகலும். உதவி செய்த சிலரே உதாசீனப்படுத்தலாம். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்.

கும்பம்

திருமணத் தடை அகலும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். அனுபவமிக்கவர்களின் ஓர் ஆலோசனை தக்க சமயத்தில் கை கொடுக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும்.

மீனம்

சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். அக்கம், பக்கத்து வீட்டாரின் பகை மாறும். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வியக்கும் செய்தி வந்து சேரும். வரவு போதுமானதாக இருக்கும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 11 =

Most Popular