அன்றாடம் நம் வாழ்வில் ஈடுபடும் அனைத்து செயல்களின் போதும், சொல்ல வேண்டிய சிவ பெருமானின் ஸ்லோகங்கள்!
பிரம்மன் படைக்கும் தொழில் புரிபவர், விஷ்ணு பகவான் காப்பவர், சிவன் அழிப்பவர். அப்படி அழிக்கும் தொழில் புரியும் எம்பெருமான் சிவனை சரணடைந்தால் மோட்சம் கிடைக்கும். தினந்தோறும் சிவன் கோயிலுக்கு சென்று சிவனை வழிபடுவது மிகச்சிறந்த பலனை அளிக்கும்.
காலையில் துயில் எழும் போது சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்:
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி
குளிக்கும் போது சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்:-
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
சிவாலயத்தின் கோபுர தரிசனம் காணும் போது சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்:-
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்:-
காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா எந்தனக்கு அருளாய் போற்றி
நண்பரைக் காணும் போது சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்:-
தோழா போற்றி துணைவா போற்றி
தொழில் செய்யும் இடங்களில் மற்றும் கடை திறக்கும் போது சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்:-
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
நாம் நிலத்தில் அமரும் போது சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்:-
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நாம் அன்றாடம் நீர் அருந்தும் போது சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்:-
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
சமையலறையில் அடுப்பு பற்ற வைக்கும் போது சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்:-
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
தினமும் நாம் உணவு உண்ணும் போது சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்:-
தென்தில்லை மன்றினுள்
ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
நம் மனதில் இனம் புரியாத அச்சம் ஏற்படும் போது சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்:-
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி
இரவில் நாம் உறங்கும் போது சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்:-
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி எல்லாம் சிவமயம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி!!!.
