Tuesday, October 17, 2023
HomeAstrology Explanationகும்ப ராசிக்கு வீட்டு கனவை நிறைவேற்றும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகர்!

கும்ப ராசிக்கு வீட்டு கனவை நிறைவேற்றும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகர்!

கும்ப ராசிக்கு வீட்டு கனவை நிறைவேற்றும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகர்!

கும்ப ராசிக்கு 4ஆம் இடத்தை சுக ஸ்தானம் என்றும், வாகன ஸ்தானம் என்றும், வீடு ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். இதற்கு எல்லாம் அதிபதி சுக்கிரன் தான். கட்டுவது குடிசை வீடாக இருந்தாலும் சரி, பங்களா வீடாக இருந்தாலும் சரி அரண்மனை போன்று இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.

சுக்கிரன் யோகாதிபதியாக வருவதால் வீடு, சொத்து எல்லாம் தானாக அமைந்துவிடும். பூமிகாரகனான செவ்வாய் உங்கள் தைரிய ஸ்தானத்திற்கு அதிபதியாக வருவதால், பற்றாக்குறையிலும் துணிந்து வீடு வாங்குவீர்கள். 30 லட்சம், 40 லட்சமாக இருந்தாலும் கையில் காசு இல்லாட்டியும் வீட்டை கச்சிதமாக கட்டி முடிப்பீர்கள்.

பூர்வீகச் சொத்துக்களை அப்படியே வைத்திருக்கவே விரும்புவீர்கள். கை அளவு நிலமாக இருந்தாலும் சொந்த ஊரில் விடிஉ கட்ட வேண்டி குடி போக வேண்டும் என்று தான் விரும்புவார்கள். சனி பகவான் ஆட்சி செய்வதால் குடிசைகளுக்கு மத்தியில் வீடு கிடைத்தால் உடனே வாங்கிவிட வேண்டும். அதுவே தரை தளமாக இருந்தால் சூப்பர். தொகுப்பு வீடு என்றால் யோசிக்கத்தான் செய்வார்கள்.

தென் கிழக்கு, தெற்கு நோக்கி தலைவாசல் இருப்பது நல்லது. வட கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டாதீர்கள். ராணுவக் குடியிருப்பு, தீயணைப்பு நிலையம், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், காவல் நிலையம் போன்ற இடங்களுக்கு அருகில் வீடோ, அடுக்கு மாடி வீடோ கிடைத்தால் நல்லது. மணலும் செம்மண்ணும் கலந்த பூமியாக இருந்தால் மிகவும் நல்லது. கும்ப ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகத்தைத் தருபவர் ரிஷபச் சுக்கிரன். கட்டிடகாரகனான சுக்கிரனும் உங்களுக்கு எளிதாக வீட்டு யோகத்தை அருள்வார். மேலும், சனி பகவான் ராசி அதிபதியாக இருப்பதால் பெருமாள் அருள்பாலிக்கும் தலத்திற்கு சென்று வந்தால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். அதனால், பூமியையே மீட்டெடுத்த வராஹரை வணங்க நிலம் மற்றும் வீடு வாங்கும் பாக்கியம் உடனே கிட்டும். இந்த வராகரைத்தான் பூவராகர் என்றும் அழைப்பார்கள்.

இந்த பூவராகர் ஸ்ரீமுஷ்ணம் எனும் தலத்தில் மூலவராக அருள்கிறார். இத்தலம் கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது. விருத்தாசலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் ராஜேந்திரப் பட்டிணத்திலிருந்து இடது புறம் 6 கி.மீ. பயணிக்க ஸ்ரீமுஷ்ணத்தை அடையலாம். வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் வராகரை வணங்க, வீட்டுக்கனவு நிஜமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − eight =

Most Popular