கடன் தொல்லையிலிருந்து விடுபட எளிய பரிகாரம்!
சுக்கிர பகவானின் பார்வை உங்கள் மேல் விழ வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி பாலாபிஷேகம் தொடர்ந்து செய்து வர வேண்டும். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் சுக்கிர பகவானின் பரிபூரண அருளும் உங்களுக்கு கிடைக்கும். அதனால் உங்கள் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவந்து யோகத்துடன் ஒரு நல்ல வாழ்க்கையை அவர் உங்களுக்கு கொடுப்பார். அதனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுக்கிர பகவானுக்கு பாலாபிஷேகமும் தொடர்ந்து தினசரி இரண்டு நெய் தீபமும் மறக்காமல் ஏற்றி வாருங்கள். இதோடு கீழ் கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தையும் செய்யுங்கள்…
பரிகாரம்:
நாம் மேலே பார்த்த பரிகாரம் போன்ற நமக்கு இருக்கும் கடன் தொல்லையில் இருந்து மீண்டு வெளி வர வீட்டிலேயே இன்னொரு எளிய பரிகாரத்தையும் நாம் செய்யலாம். ஆனால் அந்த பரிகாரம் செய்வதற்கு நீங்கள் கட்டாயம் வீட்டில் துளசி செடி வைத்திருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு நம் வீட்டில் உள்ள துளசி செடிக்கு தினமும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தீபம் ஏற்றிய பின்பு துளசி செடியின் தண்டும் மண்ணும் இணை இடத்தில் இருக்கும் மண்ணை எடுத்து திலகமாக நெற்றியில் இட வேண்டும்.
ஏனென்றால் அந்த இடத்தில் தான் மகாலட்சுமி தேவியும், மகாவிஷ்ணுவும் வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றனர். இந்த பரிகாரம் நாம் செய்வதன் மூலம் ஒரு மனிதனின் கடன் அடைய வேண்டுமென்றால் அவனுக்கு பண வரவு என்பது அதிகரிக்க வேண்டும் அந்த பணவரவை நமக்கு தாராளமாக அள்ளிக் கொடுப்பவர் தான் மகாலட்சுமி தேவி. அதிலும் மகாலட்சுமி தயாரும், விஷ்ணு பகவானும் சேர்ந்து இருக்கும் அந்த இடத்தை நாம் தினமும் தொட்டு வணங்கி வரும் போது நமக்கு இருக்கும் அனைத்து கடன் பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கான பணம் வரவு நம்மிடம் இருக்கும்.
இந்த இரண்டு பரிகாரங்களும் மிகவும் எளிமையானது சக்தி வாய்ந்தது அதனால் இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்து விட்டு தானாகவே உங்கள் கடன் அடையும் என்று உட்கார்ந்து விடக்கூடாது. உங்கள் கடனை அடைப்பதற்கு உங்களால் முடிந்த முயற்சிகளையும் நீங்கள் தொடர்ந்து எடுக்கும் போது நீங்கள் செய்த இந்த பரிகாரத்தின் பலனும் உங்களுக்கு சேர்ந்து கிடைக்கும் அதன் மூலம் உங்களுக்கு எவ்வளவு இருந்தாலும் குறுகிய காலத்தில் வேகமாக கடனை அடைத்து நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழலாம் அதனால் நம்பிக்கையுடன் இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
