ஜாதகத்தின் யோகங்களும் அதற்குரிய பலன்களும் பகுதி – 2

234
ஜாதகத்தின் யோகங்களும் அதற்குரிய பலன்களும் பகுதி - 2

ஜாதகத்தின் யோகங்களும் அதற்குரிய பலன்களும் பகுதி – 2

1.கர்மாதிபதி யோகம் என்றால் என்ன:

9-ம் வீட்டின் அதிபதியும், 10-ம் வீட்டின் அதிபதியும் சேர்ந்து இருந்தால் அதற்கு தர்ம – கர்மாதிபதி யோகம் என்று பெயர். 9-ம் வீட்டிற்கு தர்ம ஸ்தானமென்றும், 10- ம் வீடிற்கு கர்ம ஸ்தானம் என்றும் பெயர். ஒருவருகொருவர் 7 ம் பார்வை பார்த்துகொண்டாலும் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. ஆகையால்தான் அதற்கு தர்ம – கர்மாதிபதி யோக மென்று பெயர்.

Also Read This: ஜாதகத்தில் அமைந்துள்ள யோகங்களும் அதற்குரிய பலன்களும் பகுதி – 1

கர்மாதிபதி யோகத்தின் பலன்கள்:

இந்த கர்மாதிபதி யோகம் அமையபெற்றவரகளுக்கு நல் வாழ்க்கை அமையும். அபரிமிதமான பொருள் சேர்கை அனைவர்க்கும் வழிகாட்டும் தலைமை / உயர்ந்த பதவி அனைத்தும் கிடைக்கும்.

2.சகட யோகம் என்றால் என்ன:

குருவிற்கு 6,8,12 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தால் சகட யோகம் உண்டாகிறது.

சகட யோகத்தின் பலன்கள்:

சகட யோகம் கொண்டவர்கள் வறுமையில் வாழ்வார்கள். வளமிழந்து தவிப்பார். வாழ்வில் உயர்வு பெற இயலாது. வாழ்வில் ஏற்ற தாழ்வால் துன்பபடுவார். புத்திர தோஷம் உண்டாகிறது. புத்திரர்களால் மூலம் நற்பலன் இல்லை. இந்த மாதிரி அமைப்புடையவர் அதிர்ஷ்டமில்லாதவர். கஷ்ட ஜீவனமுள்ளவர், மிகவும் பிடிவாத குணமுள்ளவர், அதனால் பலராலும் வெறுக்கப்படுபவார்கள்.

3.சந்திர மங்கள யோகம் என்றால் என்ன:

ஜாதகத்தில் செவ்வாயும், சந்திரனும் சேர்ந்து இருந்தால் இந்த சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. மேலும் சந்திரனுக்கு 4,7,10 ல் செவ்வாய் இருப்பின் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது.

சந்திர மங்கள யோகத்தின் பலன்கள்:

இந்த யோகம் கொண்டவர்கள் முறையற்ற காரியங்கள் மூலம் பணம் சம்பாதிப்பார்கள். தன் தாயரைக் கடின சொற்கள் மூலம் கடிந்து கொள்வர். அதேபோல் செவ்வாயும் சந்திரனும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டாலும் இந்த யோகம் உண்டாகிறது. இவர்களுக்கு முன்கோபம் அதிகம் இருக்கும். இந்த யோகம் உடையவர் செல்வந்தராகவும் புகழ் மிக்கவராகவும் விளங்குகின்றனர்.

4.சரஸ்வதி யோகம் என்றால் என்ன:

குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் 1, 2, 4, 5, 7, 9, 10 ஆகிய வீடுகளில் தனித்தோ சேர்ந்தோ இருந்தால், குருவுக்கு அந்த வீடு சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ அல்லது நட்பு வீடாகவோ இருக்க வேண்டும். இத்தகைய அமைப்பிற்கு சரஸ்வதி யோகம் என்று பெயர்.

சரஸ்வதி யோகத்தின் பலன்கள்:

சரஸ்வதி யோகம் கொண்டவர்களுக்கு சரஸ்வதி தேவியின் அருள் நிறைந்து காணப்படும். மேலும் இவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். மேலும் நல்ல பிள்ளைகளும் பெற்றிடுவார்கள்.

5.கேம துர்ம யோகம் என்றால் என்ன:

சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கிரகம் இல்லாமல் இருந்தால் கேம துர்ம யோகம் உண்டாகிறது.

கேம துர்ம யோகத்தின் பலன்கள்:

இந்த யோகம் உடையவர்கள் தம் வாழ்வில் பெரும்பகுதி துக்கத்தை அனுபவிக்கின்றனர்.