ஜாதகத்தில் அமைந்துள்ள யோகங்களும் அதற்குரிய பலன்களும் பகுதி – 1

246
ஜாதகத்தில் அமைந்துள்ள யோகங்களும் அதற்குரிய பலன்களும் பகுதி - 1

ஜாதகத்தில் அமைந்துள்ள யோகங்களும் அதற்குரிய பலன்களும் பகுதி – 1

ஜாதகத்தில் யோகங்கள் என்றால் என்ன?

ஒருவர் ஜாதகத்தில் அமைந்திருக்கும் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிப்பதாகும் . அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு பலனையும் தரலாம் என்கிறது ஜோதிடம். எனவே, பெரிய அதிகாரி முதல், பிச்சைக்காரர் வரை யோகங்களால் தான் அந்த நிலையை அடைய முடியும். அந்த வகையில் பலவிதமான யோகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும். நாம் இந்த பகுதியில் ஒரு சில யோகங்களையும் அதனால் உண்டாகும் பலன்களையும் பார்ப்போம்.

1.அதியோகம் என்றால் என்ன:

குரு, புதன், சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள், சந்திரனுக்கு 6, 7, 8 -ம் வீடுகளில் இருந்தால் அதற்கு அதியோகம் என்று பெயர். இந்த மூன்று கிரகங்களும் ஏதாவது ஒரு வீட்டில் இருக்கலாம், அல்லது இரண்டு மற்றும் மூன்றாம் வீடுகளில் இருக்கலாம். மூன்று கிரகங்கள் இல்லாவிட்டாலும் ஏதாவது இரண்டு கிரகங்களாவது இருந்தாலும் அதுவும் அதியோகம்தான்.

அதியோகத்தின் பலன்கள்:

அதியோகம் அமையபெற்ற ஜாதகர் மிகவும் மகிழ்ச்சயான வாழ்க்கை வாழ்வர். நீண்ட ஆயுளுடன், தன்னை எதிர்த்தவர்களை வென்று நல் வாழ்க்கையை வாழ்வவார்கள். மேலும் நாணயம் மிக்கவர், நேர்மையானவர். சுகயோகங்களை அனுபவிப்பவர். அறிஞர்களால் பாராட்டபடுவார்கள்.

2.அமல யோகம் என்றால் என்ன:

லக்கினத்திலோ அல்லது சந்திரனுக்கு 10ம் வீட்டில் சுபர்களான குரு, சுக்கிரன், புதன் போன்ற சுபகிரகங்களில் எதாவது ஒரு சுபகிரகமிருந்தால் அதற்கு அமல யோகம் என்று பெயர்.

அமலயோகத்தின் பலன்கள்:

அமல யோகம் அமையபெற்றவர்களுக்கு நல்ல பெயரும், புகழுலும் கொண்ட வாழ்க்கை அமையும். இவர்கள் அன்பும் ஆற்றலும் பெற்றவர்கள், வற்றாத புகழும் அழியாத செல்வமும் கொண்டவர்கள். நல்லவர். வல்லவர் என எல்லோராலும் புகழப்படுபவர். கலை சினிமா, அரசியல் துறைகளில் புகழ் பெற்று விளங்குவார்கள்.

3.சுனபா யோகம் என்றால் என்ன:

சந்திரனுக்கு 2ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது.

சுனபா யோகத்தின் பலன்கள்:

சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல அறிவு நிரம்ப பெற்றவர். பெரும் புகழும் உடையவர், சொத்து சுகங்கள் அமையப் பெற்றவர்.

4.துருதுரா யோகம் என்றால் என்ன:

சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம் உண்டாகிறது.

துருதுரா யோகத்தின் பலன்கள்:

கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர்.