Sunday, October 15, 2023
HomeAstrology Explanationலக்னாதிபதியும் ராசிக்கல்லும்!

லக்னாதிபதியும் ராசிக்கல்லும்!

லக்னாதிபதியும் ராசிக்கல்லும்!
ராசிக்கல்லை அணிய கூடாது, ராசியான கல்லை மட்டுமே அணிய வேண்டும் !

ஒரு ஜாதகரின் உயர்வும், தாழ்வும் லக்னாதிபதியின் வலுவுக்குகேற்ப அமையும்.
தங்களுக்கு ஏற்படக்கூடிய துன்பத்தை தாங்குகின்ற வலுவை கொடுப்பவர் லக்னாதிபதி மட்டுமே. அதனால் லக்னாதிபதியின் கல்லை தங்களின் வாழ் நாள் முழுவதும் மோதிர விரலில் அணிவே சிறந்தது. லக்னத்திற்கு ஆறாம் அதிபதியாக வரக்கூடிய ராசி அதிபதியின் கல்லை அணிய கூடாது. அணிந்தால் எதிர்மறையான பலன் தான் நடக்கும்.

எடுத்துக்காட்டாக மேஷ லக்னம் ஆறாம் ராசியான கன்னி ராசியில் பிறந்த ஜாதகர் புதனின் பச்சை நிற கல்லை அணிய கூடாது. மிதுன லக்னம் ஆறாம் ராசியான விருச்சக ராசியில் பிறந்த ஜாதகர் செவ்வாயின் பவளத்தை அணிய கூடாது.
இப்படி ஒவ்வொரு லக்னத்திற்கும் தங்களின் ராசி அதிபதியை பொருத்தி பார்த்து கொள்ள வேண்டும்.

விதிவிலக்காக மேஷ லக்னம் விருச்சிக ராசி விருச்ச லக்னம் மேஷ ராசி ஜாதகர்கள் தங்கள் லக்னாதிபதியின் பவளத்தை மட்டுமே அணிய வேண்டும். ரிஷப லக்னம் துலாம் ராசி துலாம் லக்னம் ரிஷப ராசி ஜாதகர்கள் தங்கள் லக்னாதிபதியின் வைரம், ஜர்கன் கல்லை மட்டுமே அணிய வேண்டும். எக்காரணத்தை கொண்டும் ராசி அதிபதியின் கல்லை அணிய கூடாது.

ஸ்ரீ ஸ்ரிங்கேரி சாரதாம்பாள் திருவடிகளே சரணம்

ராசிகளில் சூரிய ஒளி

கர்நாடக மாநிலம் சிருங்கேரி என்ற இடத்தில் சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது.
ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தில் மூலவர் கருவறையின் முன்பாக ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தின் 12 தூண்களிலும், 12 ராசி களுக்கான அதிபதிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் என்ன விசேஷம் என்றால், சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் அந்தந்த மாதங்களில், ஆலயத்தில் உள்ள ராசிக்கான அதிபதிகளின் உருவத்தின் மீது சூரிய ஒளிபடுகிறது. இதனைக் காண்பதற்காகவே இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

நவகிரக பரிகாரங்கள்…
சூரியனால்..
பாதிக்கப்பட்டவர்கள் வெல்லம் அல்லது கருப்பட்டிகளை அவருடைய வயது எத்தனையோ அவ்வளவு எண்ணிக்கையில் ஓடும் ஆற்று நீரில் விடவும்.
சந்திரனால்…
பாதிக்கப்பட்டவர்கள் பசும்பாலை ஒரு பாத்திரம் நிறைய ஊற்றி இரவு படுக்கப் போகும் முன்பு கட்டிலுக்கு அடியில் வைத்து மறுநாள் காலை அதை வேப்பமரத்தின் வேரில் ஊற்றிவிடவும்- 11 திங்கள் வைத்து செவ்வாய் கிழமைகளில் வேரில் ஊற்றிவிடவும்.
செவ்வாயில்…
பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைப்பொங்கல் அல்லது இனிப்பு பலகாரம் செய்து கோயில்களில் தானமாக வழங்கவும்.
புதனால்…
பாதிக்கப்பட்டவர்கள் ஒரு செம்பு நாணயத்தில் நடுமையத்தில்ஓட்டை செய்து ஆற்று நீரின் மையத்தில் விட்டுவரவும்.
குருவால்…
பாதிக்கப்பட்டவர்கள் உணவு அருந்தும் முன் குங்கும பூ பொடியை நாக்கின் நடுமையத்தில் வைத்து சிறிது தியானம் செய்தபின் உணவை அருந்தவும் .குருவினால் ஏற்படும் கஷ்டம் வெகுவாக குறையும்.
சுக்கிரனால்…
பாதிக்கப்பட்டவர்கள் பசுமாட்டுக்கு சாமை அல்லது தினை பச்சை இலைகளை வழங்கவும் சாமை திணை இலைகள் கிடைக்காதபட்சத்தில் ஏதோ பச்சை தழைகளை வழங்கலாம்.
சனியால்…
பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கவும்.இரும்பு அல்லது கருப்புநிற பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தன்முகம் பார்த்து ஏழைகளுக்கு தானம் வழங்கவும்.
ராகுவால்…
பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கிகளை ஒரு கவரில் போட்டு இரவு படுக்கும் முன் தன்னருகே வைத்திருந்து மறுநாள் அதை ஏதோ கோயிலில் கொடுத்துவிடவும் மேலும் தீய்ந்த மரக்கட்டைகள் அல்லது எரிந்த நிலையில் உள்ள மரக்கட்டைகளை ஆற்றில் வீசவும்.
கேதுவால்…
பாதிக்கப்பட்டவர்கள் நாய்களுக்கு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி/ரொட்டிகளை வழங்கவும்.

RELATED ARTICLES

Most Popular