Saturday, October 14, 2023
HomeAstrological Remediesவாஸ்து தோஷம் பரிகாரம்!

வாஸ்து தோஷம் பரிகாரம்!

வாஸ்து தோஷம் பரிகாரம்!

வீட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு பஞ்சபூதங்கள் ஆட்சி செய்கின்றன…
தென்மேற்கு நிருதி மூலையை நிலப்பஞ்சபூதமும்
வடமேற்கு வாயு மூலையை காற்று பஞ்சபூதமும்
வடகிழக்கு ஈசான்ய மூலையை காற்று பஞ்சபூதமும்
தென்கிழக்கு அக்னி மூலையை நெருப்பு பஞ்சபூதமும் ஆட்சிசெய்கிறது…
மேற்கண்ட முறையில் ஒருவீட்டில் வாஸ்து குற்றம் இருந்தால் கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தை செய்து கொள்ளலாம்..

நிலப்பஞ்ச பூதம் ஆட்சி செய்யும் நிருதிமூலையில் குற்றம் தோஷம் இருப்பின் வளர்பிறை செவ்வாய்கிழமை காலை 6.00-6.48 மணிக்குள் யானை காலடிமண்ணை ஓம் நமசிவாய என 108 முறை சொல்லிவந்து எடுத்த மண்ணில் 90 கிராம் மட்டும் எடுத்து துணியில் கட்டி வீட்டின் நைருதி மூலையில் துளையிட்டு தனது அதிகார நாளில் அரசில் அரசு அல்லது அரசில் ஊண் அல்லது ஊணில் அரசு நேரத்தில் குரு ஓரை தனகெளரி அல்லது சுக்ர ஓரை சுக கெளரி அல்லது சந்திர ஓரை அமுத கெளரியில் போட்டு மூடிவின நிருதி மூலையின் தோசம் விலகும்…

நீர்பஞ்சபூத த்தின் ஈசான்ய மூலையில் தோசம் நீங்க வளர்பிறை புதன் அன்று காலை 6.00-6.48 மணிக்குள் குளத்து மண்ணை ஓம் மசிவயந என 108 முறை சொல்லி எடுத்துவந்து அதில் 110 கிராமை மட்டும் எடுத்து துணியில் முடிந்து வீட்டின் ஈசான்ய மூலையில் துளையிட்டு தனது அதிகார நாளில் அரசில் அரசு அல்லது அரசில் ஊண் அல்லது ஊணில் அரசு நேரத்தில் குரு ஓரை தனகெளரி அல்லது சுக்கிர ஓரை சுக்கெளரி அல்லது சந்திரன் ஓரை அமுத கெளரியில் போட்டு மூடிவிட ஈசான்ய மலையின் தோசம் விலகும்…

நெருப்பு பஞ்சபூதம் அக்னி மூலையில் தோசம் நீங்க வளர்பிறை வியாழன் அன்று காலை 6.00-6.48 மணிக்குள் சுண்ணாம்பு சூளை மண்ணை ஓம் சிவயநம என 108 முறை சொல்லி எடுத்து வந்து அதில் 40 கிராமை துணியில் முடிந்து வீட்டின் அக்னி மூலையில் துளையிட்டு தனது அதிகார நாளில் அரசில் அரசு அல்லது அரசில் ஊண் அல்லது ஊணில் அரசு நேரத்தில் குரு ஓரை தனகெளரி அல்லது சுக்கிர ஓரை சுக்கெளரி அல்லது சந்திரன் ஓரை அமுத கெளரியில் போட்டு மூடிவின அக்னி மூலையின் தோசம் விலகும்..

காற்று பஞ்சபூதம் வடமேற்கு மூலை வாயு மூலையின் தோசம் விலக வளர்பிறை வெள்ளி அன்று காலை 6.00-6.48 மணிக்குள் புற்று மண்ணை ஓம் வயநமசி என 108 முறை சொல்லி எடுத்து வந்து அதில் 150 கிராம துணியில் முடிந்துவாயு மூலையில் துளையிட்டு தனது அதிகார நாளில் அரசில் அரசு அல்லது அரசில் ஊண் அல்லது ஊணில் அரசு நேரத்தில் குரு ஓரை தனகெளரி அல்லது சுக்கிர ஓரை சுக்கெளரி அல்லது சந்திரன் ஓரை அமுதகெளரியில் போட்டு மூடிவிட வாயு மூலையின் தோசம் விலகும்.

RELATED ARTICLES

Most Popular