மிருதுவான முள்ளங்கி சப்பாத்தி வித் ஸ்வீட் கார்ன் குருமா செய்வது எப்படி?

311

மிருதுவான முள்ளங்கி சப்பாத்தி வித் ஸ்வீட் கார்ன் குருமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  1. துருவிய முள்ளங்கி – அரை கப்
  2. கோதுமை மாவு – ஒரு கப்
  3. சோள மாவு – கால் கப்,
  4. கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது சிறிதளவு
  5. வெங்காயம், பச்சை மிளகாய் – சிறிதளவு
  6. எண்ணெய் – தேவையான அளவு
  7. உப்பு – தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

துருவிய முள்ளங்கியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், உப்பு சேர்த்து, கோதுமை மாவு, சோள மாவைப் போட்டு தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். சுவையான முள்ளங்கி சப்பாத்தி தயார்.

ஸ்வீட் கார்ன் குருமா செய்ய தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் – 3/4 கப்
* வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் – 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
* பால் – 1/4 கப்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிதளவு
* உப்பு – தேவையான அளவு
* எண்ணெய் – தேவையான அளவு

தாளிப்பதற்கு:
* கிராம்பு – 1
* பட்டை – 1/4 இன்ச் துண்டு
* ஏலக்காய் – 1
அரைப்பதற்கு:
* துருவிய தேங்காய் – 1/2 கப்
* கசகசா – 1/2 டீஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* தக்காளி – 1
*பச்சை மிளகாய் – 1

செய்முறை விளக்கம்:

* முதலில் குக்கரில் ஸ்வீட் கார்னைப் போட்டு, போதுமான நீரை ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். அதே வேளை ஒரு டீ ஸ்பூன் பாலில் கசகசாவை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் துருவிய தேங்காயை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தக்காளியை நன்கு மென்மையாக வதக்கி இறக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த தேங்காய், வதக்கிய தக்காளி, சோம்பு, பாலில் ஊற வைத்த கசகசாவைப் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்த தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி, சிறிது நீர் ஊற்றி, பின் பாலையும் ஊற்றி கிளறி, 3-5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி கெட்டியாக இருப்பது போல் இருந்தால், சிறிது நீர் ஊற்றிக் கொண்டு, வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வேக வைத்துள்ள ஸ்வீட் கார்னை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஸ்வீட் கார்ன் குருமா தயார். இதை முள்ளங்கி சப்பாத்தி யுடன் பரிமாறவும்.