சிவ புஜங்கம் !

567

எவருடைய கிரீடத்தில் சந்திரபிறையும்,
நெற்றியில் அக்னியும்,
கைகளில் ஸர்ப்ப ராஜனும்,
கழுத்தில் காலகூடக் கறுமையும்,
உடம்பில் சக்தியும், உறைகிறார்களோ அப்படிப்பட்ட கடவுளை சிவனன்றி அறியேன். . அறியேன். . அறியேன். .

கழுத்தில் காலகூடமில்லாத,
உடம்பில் நாகம் தவழாத,
கையில் கபாலமில்லாத,
நெற்றியில் தீக் கண்ணில்லாத,
மௌலியில் சந்திர பிறையில்லாத,
இடது பாகம் உமையாள் இல்லாத
வேறு ஒரு கடவுளை கடவுளாக
நான் மனதாலும் நினையேன். .

நெற்றிக் கண்ணில் தீப்பொறி தோன்றாத,
இடது பக்கம் அழகிய நங்கை மிளிராத,
உடம்பில் பாம்பு அணிகலன்கள் தவழாத,
சந்திர மௌலியாக இல்லாத
பிற தெய்வங்கள் எனக்கு வேண்டாமே!

யம வாஹனமாகிய மஹிஷப்பகைவனின் கழுத்தில் தொங்கும்
மணியின் ஒசை என் செவியில் விழுவதற்குள்
தங்கள் வாஹனமாகிய விருஷ பத்தின் மீதேரி
பயப்படாதே குழந்தாய் என்று சொல்லி மனம் தேற்றுவீராக!

யமதூதர்கள் கடுஞ் சொற்களைக் கூறிக்கொண்டு
என்னருகில் தொங்குவதற்குள்,
ஹே ஷம்போ!
ஒரு கணம் என் மனம் தங்கள் திருவடித்தாமரையில் பதிந்து
அசையாமலிருக்க வேண்டுமே!
உமக்கு நமஸ்காரம். .

ஹே ஜகந்நாதா!
முதுமை, பிறப்பு, இறப்பு முதலிய
பொறுக்கவொண்ணாத் துன்பங்களை
முற்றிலும் விட்டொழிக்க உம்மைத் தவிர எனக்கு வேறு வழி ஏது?
நீர் தயையுள்ள வராயிற்றே!
உமக்குக் கூட தயை பிறக்கவில்லையா?
ஹே சந்திரமௌலிப்ரியே!
நீ என்னை கவனித்துக் கொள்.

நீ தானே அம்மா!
சம்சார நோய்க்கு மருந்து.
சம்ஸாரக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும் என்னை
நினது திருவடிப்படகில் ஏற்றி கரைக் கடக்கச் செய்!
இந்த விசித்ர உலகம்
எங்கிருந்து தோன்றி, நிலைகொண்டு,
பின் எதனில் கடைசியில் ஒடுங்குகிறதோ
அதே, கர்மம் முதலியன இல்லாததாகி
ஸ்வயம் பிரகாசமான,
ஆத்ம ஸ்வரூபமான
சிவனே நான். .
சிவனே நான். .
சிவனே நான். .

மஹாதேவ! ஷம்போ!
கிரீசா ! த்ரிசூலனே!
உம்மிடமே இந்த அகில உலகும் துலங்குகிறது.
ஆகையால், சிவனாகிய உன்னைத் தவிற வேறு தெய்வத்தை அறியேன்.
நானே சிவன். .
நானே சிவன். .
நானே சிவன். .
– ஆதி சங்கரர்