சமையல் செய்ய அரிசி எடுத்துக் களையும் போது சொல்ல வேண்டிய ஸ்ரீ அக்ஷய ஸ்துதி

438

பெண்கள் தினமும் சாதம் செய்யும்போது ஏதாவது ஒரு அளவில் அரிசி எடுப்போம் அல்லவா.

அதே அளவை மூன்று சிறிய அளவில் எடுத்து

முதல் தடவை எடுக்கும் போது இது பெருமாளுக்கு என்றும்

இரண்டாம் அளவு எடுக்கும் போது இது தாயாருக்கு என்றும்

மூன்றாவது தடவை எடுக்கும் போது இது ஆசார்யனுக்கு அல்லது குருவுக்கு என்று சொல்லி எடுத்து சமைத்து வர

அரிசி எடுத்த பாத்திரத்தில் அரிசி என்றும் குறையாதாம்.

அவர்கள் மூவரும் குறையாத அளவுக்கு அனுக்ரஹம் செய்வார்களாம்.

நாம் பெருமாளுக்கு… தாயாருக்கு… ஆச்சார்யனுக்கு/குருவுக்கு என்று சொல்லி உலையிடும் அரிசியை வருணதேவனும்…அக்னியும் வாயு பகவானின் துணை கொண்டு பல மடங்காக ஆக்கி.. சாதமாக நாம் சாப்பிடும் பக்குவத்தில் ஆக்கி தருகிறார்கள்.

அதைப் போலவே நாம் செய்யும் ஒரு நல்ல காரியம் பல மடங்காக பெருகி நமக்கே திரும்ப கிடைக்கிறது.

சமையல் செய்ய அரிசி எடுத்துக் களையும் போது சொல்ல வேண்டிய ஸ்ரீ அக்ஷய ஸ்துதி இது.

கீர்த்தி பாண்டம், திரெளபதி கலயம்,
பாண்டவர் யக்ஞம், பஞ்ச பாண்டவர்,
போஜனம், அரிசி அலை மோத,
அன்னம் மலை போல் குவிய அர்ஜுனன்
படை வந்தாலும். மறித்து உலை வைக்க
மாட்டேன், ஸ்ரீ கிருஷ்ணா! உன்
அக்ஷயம் அக்ஷயம்
அக்ஷயம்.