ஆண்களுக்கு திருமணம் நடக்க கிருஷ்ணர் மந்திரம்!
இன்றைய காலகட்டத்தில் ஆணாக இருந்தால் பெண் கிடைப்பதில்லை, பெண்ணாக இருந்தால் ஆண் கிடைப்பதில்லை. அப்படியும் அமைந்தால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கோர்ட் கேஸ் என்று அழையும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், நம் முன்னோர்கள், என்னதான் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சென்று நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.
ஆனால், இந்த காலங்களில் அதெல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. 30 வயதுக்கும் மேலாகியும் திருமணமாகாமல் நிறைய ஆண்களும் இருக்கிறார்கள், பெண்களும் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு ஜாதக ரீதியாக பிரச்சனை இருக்கலாம். இன்னும் சிலருக்கு நேரம் காலம் அமையாமல் இருக்கும். காலமும், நேரமும் கூடி வந்தால் எல்லாமே தானாக நடக்கும். சரி, இந்தப் பதிவில் ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க என்ன செய்ய வேண்டும்? என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
புல்லாங்குழலின் இசையால் பக்தர்களின் மனதைக் கவர்ந்த ஸ்ரீகிருஷ்ண பகவானை நாள் தோறும் வணங்கி வந்தால், விரைவில் திருமணம் கூடும் என்பது ஐதீகம். அதே போன்று அந்தப் புல்லாங்குழலின் இசையால் மன அழுத்தம் குறைந்து, உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம். ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க ஸ்ரீ கிருஷ்ண பகவானின் இந்த மந்திரத்தை தினந்தோறும் 21 நாட்கள் தொடர்ந்து காலையிலும் மாலையிலும் சொல்லி வர திருமணத் தடை நீங்கி விரைவில் திருமண யோகம் கை கூடி வரும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மந்திரம்:
கோபல ரத்நம் புவனைக ரத்நம்
கோபாங்க நாயௌவந பாக்ய ரத்நம்
ஸ்ரீகிருஷ்ண ரத்நம் ஸுரஸேவ்ய ரத்நம்
பஜா மஹே யாதவ வம்ச ரத்நம்.
கிருஷ்ண பகவானுக்கு உகந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி அன்று நெய்தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை கூறி பகவானுக்கு பூஜை செய்தால், திருமணம் ஆகாத கன்னிமார்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அப்படி திருமணம் நடந்தவர்கள் கணவன் மனைவியாக அருகிலுள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று கிருஷ்ண பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.
