Monday, October 16, 2023
HomeMahans27 நட்சத்திரங்களுக்குரிய சித்தர்கள்!

27 நட்சத்திரங்களுக்குரிய சித்தர்கள்!

27 நட்சத்திரங்களுக்குரிய சித்தர்கள்!

பொதுவாக சித்தர்களது வாக்கு சிவன் வாக்கு என்பார்கள். இறை ஆற்றல் கொண்டவர்கள் எப்போது இறைவனுடன் பற்று கொண்டிருப்பார்கள். அவர்கள் இறையாற்றல் மிக்கவர்கள். மனிதர்களுக்கு சாத்தியம் அல்லாதவற்றையும் செய்து அளிக்கும் சக்தி படைத்தவர்கள் சித்தர்கள். நாமும் அத்தகைய எத்தனையோ நிகழ்வுகளைப் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர். அந்த நட்சத்திரகாரர்கள் அந்த சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் தன்னுடைய நட்சத்திரகாரர்களுக்கு கேட்ட வரங்களை வாரி வழங்குவார்.

அஸ்வினி – காலங்கி நாதர் சித்தர் – இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது.

பரணி -போகர் சித்தர். இவருக்கு பழனி முருகன் சன்னிதியில் சமாதி உள்ளது.

கார்த்திகை – ரோமரிஷி சித்தர். இவருக்கு ஜீவசமாதி இல்லை. (காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என்று கூறப்படுகிறது).

ரோகிணி – மச்சமுனி சித்தர். இவரது ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

மிருகசீரிடம் – பாம்பாட்டி சித்தர் மற்றும் சட்டமுனி சித்தர் – பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் சமாதி ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது.

திருவாதிரை -இடைக்காடர். இவரது ஜீவசமாதி, திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.

புனர்பூசம் – தன்வந்தரி சித்தர். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

பூசம் -கமல முனி சித்தர். இவரது ஜீவசமாதி அடைந்த இடம் திருவாரூர்

ஆயில்யம் – அகத்தியர் சித்தர். இவரது ஒளிவட்டம் குற்றாலப் பொதிகை மலையில் உள்ளது.

மகம் நட்சத்திரம் – சிவ வாக்கிய சித்தர். இவரது ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.

பூரம் நட்சத்திரம் – ராமதேவ சித்தர். இவரது ஜீவ சமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை.

உத்திரம் நட்சத்திரம் – காகபுஜண்டர். இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.

ஹஸ்தம் நட்சத்திரம் – கருவூரார் சித்தர். இவர் சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.

சித்திரை நட்சத்திரம் – புண்ணாக்கீசர் சித்தர். நண்ணா சேர் என்ற இடத்தில் இவரது ஜீவ சமாதி உள்ளது.

சுவாதி நட்சத்திரம் – புலிப்பாணி சித்தர். இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் இருக்கிறது.

விசாகம் நட்சத்திரம் – நந்தீசர் சித்தர் மற்றும் குதம்பை சித்தர் ஆவர். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

அனுஷம் நட்சத்திரம் – வால்மீகி சித்தர். இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

கேட்டை நட்சத்திரம் – பகவான் வியாசருக்கு உரியது. இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

மூலம் நட்சத்திரம் – பதஞ்சலி சித்தர் ஆவார். இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

பூராடம் நட்சத்திரம் – ராமதேவர் சித்தர். இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம் என்று சொல்லப்படுகின்றது ஆனாலும் பூராடம் நட்சத்திரத்திற்கு

கடுவெளி சித்தர் மிக பிரபலம்

உத்திராடம் நட்சத்திரம் – சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

திருவோணம் நட்சத்திரம்- தட்சிணாமூர்த்தி சித்தர். இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

அவிட்டம் நட்சத்திரம் – சித்தர் திருமூலர் சித்தர்.. இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்.

சதயம் நட்சத்திரம் – கவுபாலர் சித்தர். இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.

பூரட்டாதி நட்சத்திரம் – ஜோதிமுனி சித்தர். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.
உத்திரட்டாதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.

ரேவதி நட்சத்திரம் – சுந்தரானந்தர் சித்தர். இவர் ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + four =

Most Popular