தினமும் சிவபெருமான் திருமந்திரம் சொல்லுங்க

189

தினமும் சிவபெருமானுக்கு உகந்த திருமந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். மனம் அமைதியடையும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.

காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அவ்வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்

ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே.

-திருமந்திரம்

பொருள் :

ஈசன் உறவுக்கு ஒப்பில்லை. தூல உடம்பும் சூக்கும் உடம்பும் ஒன்றாகக் கலந்து இருப்பினும் மாயை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில் தான் கானமானது மிகுந்திருக்கும். அக்கானம் அல்லது நாத வழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை