விளக்கேற்றி அவளை வழிபடுங்கள்

300

விளக்கேற்றி அவளை வழிபடுங்கள்
வினையகலும் வாழ்வில் வழிபிறக்கும்
திருக்கோலம் சந்நிதியில் போடுங்கள்
தீவினைகள் மனக் குறைகள் அகன்றுவிடும்.

மரமடர்ந்த மலைகளிலே வாழ்கின்றவள்
மகேஸ்வரனை மணாளனெனக் கொண்டவள்
மருள் கொடுக்கும் அசுரர்களை வென்றவள்
மனதிற்கு அமைதிதனை அளிப்பவள்.

அம்பிகையை தியானித்து
அளித்திடுங்கள் தர்மத்தை.
அத்தனையும் புண்ணியமாய்
அவள் மாற்றித் தந்திடுவாள்.

புகழ் தேடும் புண்ணியனே
புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
புவனமெங்கும் வாழ்கின்ற
புண்ணிய சக்தியை வழிபடுங்கள்.