ஒற்றை கொம்பனை பற்றிப் பார் அதில் உள்ளத் தாமரை தித்திக்கும்
பற்றும் நம் பணி வெற்றி பாதையில் பற்றும் நாள் வரை சித்திக்கும் …
தித்தித்தால் அது சித்திக்கும் சித்தித்தால் அது தித்திக்கும்
சித்தித்தால் அது தித்திக்கும் தித்தித்தால் அது சித்திக்கும்
சங்கர சங்கரி பங்கயர் கண்களில் மங்களம் புரிந்திட வந்தானே!!
https://swasthiktv.com/madhura-gaanam-registration/
பக்தியுடன் பூவை போட்டால் பொன்னை தரும் தெய்வம்
சக்தி மகன் கண்ணை கண்டால் தானே வரும் செல்வம்
பெற்றவரை உலகமென்று சுற்றி வரும் பிள்ளை தான்
பிள்ளைகளின் பாசம் என்ன சொல்லி தரும் எல்லை தான் ….
நம்பிய தம்பியை காத்தவனே வள்ளலை வள்ளியில் சேர்த்தவனே …
தும்பிக்கை ஒரு நம்பிக்கை என துன்பம் தீர்த்திடும் தூயவனே
ஐங்கரன் என்பவன் அற்புதம் செய்பவன் பொற்பதம் மின்னிட வந்தானே…..
குஞ்சரத்தை பாடும் போது கொஞ்சும் சுகம் கோடி
நெஞ்சகத்து பொய்கை தன்னில் நீந்தும் விளையாடி …….
வஞ்சகத்தை வெல்லும் தெய்வம் வாழ்வில் நல்கும் நன்மை தான்
தஞ்சமென்று சொன்னால் போதும் காவல் நிற்கும் உண்மை தான்
உத்தமி புத்திர நாயகனே
வித்தக மித்ராவிநாயகனே
தும்பிக்கை ஒரு நம்பிக்கை என துன்பம் தீர்த்திடும் தூயவனே
ஐங்கரன் என்பவன் அற்புதம் செய்பவன் பொற்பதம் மின்னிட வந்தானே……
கணேச சரணம்.
