விருப்பங்களை நிறைவேற்றும் காமாட்சி அம்மன் ஸ்லோகம்

351

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் காமாட்சி அம்மன் நம் விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வாள்.

காமாட்சி அம்மன்ஸ்யாமா காசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்ம நாமனனே
ஸீமாஸுன்ய வித்வ வர்ஷஜனனீ யா காபி காதம்பினீ
மாராராதி மனோவி மோஹன விதௌ காசித்தம கந்தலீ
காமாக்ஷ்யா கருணாகடாக்ஷலஹரீ காமாயமே கல்பதாம்!
– மூக பஞ்சசதி

பொருள்: காமாட்சி தேவியே, கருணை நிரம்பிய தங்களின் கண்களின் நிகரற்ற கருப்பு நிறமான சந்திரனைப் போலவும், மூவுலகிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில் அளவற்ற கவித்துவ சக்தியைப் பொழிவிக்கும் மேகக் கூட்டங்கள் போலவும், மன்மதனை எரித்த பரமேஸ்வரனின் மனதை மோகிக்கச் செய்வதில் நிகரற்ற இருள் குவியல் போல உள்ளது. அந்த உன் கருணை கடாக்ஷ அலைகள் எனது அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய உன் திருவருள் பக்தர்களுக்காக எதைத்தான் செய்யாது? தங்களை மறுபடி மறுபடி வணங்குகிறேன்.