Saturday, October 21, 2023
HomeUncategorizedகல்கண்டு வடை - செட்டிநாட்டு ரெசிபி

கல்கண்டு வடை – செட்டிநாட்டு ரெசிபி

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

‘செட்டிநாடு’ என் றாலே… கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் கண் முன்னே விரியும். கும்மாயம், இனிப்பு சீயம், ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை என்று இந்த இணைப்பிதழில் ‘செட்டிநாடு சமையல் மேளா’வையே நடத்திக் காட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் ‘சமையல் கலை நிபுணர்’ கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார். ”சாப்பிடுவதை சுகானுபவமாக மாற்றும் இந்த ஸ்பெஷல் அயிட்டங்களில்… சுண்டைக்காய் பச்சடி, சிவப்பரிசி புட்டு, கீரை மண்டி போன்றவை… உடல் நலத்தை உறுதிப்படுத்தும் உற்ற துணையாகவும் இருக்கும்”

தேவையானவை: உளுந்து – ஒன்றரை கப், பச்சரிசி – 2 டேபிள்ஸ்பூன், கல்கண்டு – ஒரு கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். முக்கால் பதம் அரைத்தவுடன் பொடித்து வைத்த கல்கண்டை சேர்த்துக் கரைக்கவும் உளுந்தை அரைக்கும்போது, தண்ணீர் சிறிது கூட சேர்க்கக் கூடாது. அரைத்து முடித்ததும் மாவு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும் (தீயை மிதமாக எரிய விட வேண்டும்).

குறிப்பு: கல்கண்டு சேர்ப் பதால், தீ அதிகமாக எரிந் தால், வடை கறுத்து விடும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + two =

Most Popular