Monday, October 16, 2023
HomeUncategorizedஅனைத்து தடைகளும் நீங்கி வெற்றியைத் தரக்கூடிய ஹனுமன் ஸ்லோகங்கள்!

அனைத்து தடைகளும் நீங்கி வெற்றியைத் தரக்கூடிய ஹனுமன் ஸ்லோகங்கள்!

அனைத்து தடைகளும் நீங்கி வெற்றியைத் தரக்கூடிய ஹனுமன் ஸ்லோகங்கள்!

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அனுமனை தரிசனம் செய்து, பின் ஆராதித்து வழிபட்டு இந்த மந்திரங்களை கூறி வந்தால் அச்சம் விலகி எடுத்த காரியம் வெற்றிப்பெறும். வாயு மைந்தனாக, ஸ்ரீ ராமனின் சேவகனாக, சிவ பெருமானின் அவதாரமாக இருப்பவர் ஆஞ்சநேயர். அனுமனை வணங்கினால் அனைத்து தெய்வங்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

1. அச்சம் விலக:

ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்

தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.

2. அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்:

ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே

3. அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.

“”நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!

4. சுந்தரகாண்டத்தில் அனுமன்கடலைத் தாண்டுவதற்கு முன்புசொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஷ்ச மஹாபல தாஸோஹஂ கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஹா

5. பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் அனைத்து வித பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றம் அனுமனின் உருவம் நடுவிலும் ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோரின் முகங்கள் இணைந்த பஞ்ச முக வடிவை வணங்குவதாலும், பஞ்ச முக ஆஞ்சநேயருக்கான மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து ஆஞ்சநேயரை வணங்கி வந்தால், ஜாதக தோஷம், கிரக பீடைகள், கிரக பெயர்ச்சி கெடுபலன்கள், கெட்ட கனவுகள் என பல்வேறு துன்பங்களிலிருந்து உங்களை காத்து அனைத்து வகை நன்மைகளைப் பெற்று இனிய வாழ்வும், ஆரோக்கியமும் பெற்று வாழலாம்.

பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:

ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய வாயு புத்ராய
மகா பலாய சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயனசமார்த்தாய
அங்கதலட்சுமண கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திரப்ராசதகாயட்
ப்ரயோகாங்க பஞ்சமுக ஹனுமதே நம!

ஆஞ்சநேயர் மந்திரங்களை உரைக்க படிப்பவரை எந்த ஒரு தீய சக்தியும் தாக்காது. இது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மனது மற்றும் ஆன்மாவில் நிலவும் அனைத்து வித எதிர்மறை எண்ணங்களை போக்கி, அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − ten =

Most Popular