Saturday, October 28, 2023
HomeUncategorizedஆசைப்பட்டதெல்லாம் கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு!

ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு!

ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு!

வெற்றி மேல் வெற்றி கிடைக்க, நினைத்தது நடக்க, ஆசைப்பட்டது நிறைவேற ஒரு கொடுப்பினை வேண்டும். இது எல்லோருக்கும் அமைவது கிடையாது. ஏதோ ஒரு விஷயத்துக்காக எல்லோருமே ஒரு தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த தேடலின் ஆசைகளை பூர்த்தி செய்வது இறையருள் மட்டுமே ஆகும். நமக்கு என்ன தேவை என்றாலும் இறைவனை நாடி செல்கிறோம். இப்படி நம்முடைய வேண்டுதல்களை ரொம்ப சுலபமாக நிறைவேற்றி கொடுக்கக்கூடிய ஒரு எளிய ஆஞ்சநேயர் வழிபாடு தான். இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

இந்த பிரபஞ்சத்தில் இன்னும் கண்கண்ட கடவுளாக இருக்கக் கூடியவர் ஆஞ்சநேயர்! இவருடைய பக்திக்கு மெய்நிகர் எதுவுமே கிடையாது. சிறந்த பக்திமானாகவும், பக்தர்கள் வேண்டிய வரங்களை அள்ளிக் கொடுக்கும் கடவுளாகவும் இருக்கக்கூடிய ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு தோல்விகளே கிடையாது என்பது நம்பிக்கை. காரிய வெற்றிக்கு ஆஞ்சநேயரை பெரும்பாலும் வழிபடுவது உண்டு.

ஒரு விஷயத்தில் தேர்ச்சி பெற்று வெற்றி அடைய வேண்டும் என்றால் இவரை தான் நாடி செல்கிறோம். ஸ்ரீ ராம ஜெயம்’ என்னும் மந்திரத்தை மாலையாக கோர்த்து இவருக்கு போட்டு வந்தால் தேர்வில் வெற்றி பெறுவோம் என்று மாணவர்களும், திருமணம் கைகூடி வரும் என்று இளம் பருவத்தினரும் நம்புவது உண்டு.

ஆஞ்சநேயரை முழு மனதோடு வழிபடுபவர்களுக்கு எல்லாமே சித்தியாகும். என்பது தான் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் ரொம்பவும் விசித்திரமான பரிகாரமாக இந்த பரிகாரம் இருக்கப் போகிறது. இதை நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கும் என்பது நியதி!
சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு உகந்த கிழமையாக இருக்கிறது.

ஆஞ்சநேயர் கோவிலுக்கு அன்றைய தினம் சென்று, அவருக்கு வாசனை அதிகம் இருக்கின்ற ஒரு ரோஜா பூவினை வாங்கி சாற்றி கொள்ளுங்கள். அது போல ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் போது நீங்கள் விரும்பும் ஏதாவது ஒரு வாசனை திரவத்தை வாங்கிச் செல்லுங்கள். இந்த வாசனை திரவத்தை ஆஞ்சநேயர் உடைய பாதத்தில் வைத்து வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும்.
இயற்கையான நறுமணம் மிக்க ஜவ்வாது வாங்கி செல்லலாம் அல்லது நீங்கள் பயன்படுத்தும் மற்ற எந்த வாசனை திரவியத்தையும் நீங்கள் இந்த பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாதத்தில் வைத்து எடுத்த பின்பு அந்த வாசனை திரவியத்தை நீங்கள் தினமும் காலையில் குளித்து முடித்ததும் பிரஷ் ஆக தடவிக் கொள்ளுங்கள். நறுமணம் மிக்க இந்த வாசனை திரவியம் உங்களுடைய உடலில் வீச துவங்கும் பொழுது இறையருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் ஆசைப்பட்டதெல்லாம் விரைவாகவே நடக்கும் என்பது நம்பிக்கை. இறைவன் வாசனை மிகுந்த எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.
நம்முடைய உடலை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, நறுமணத்தோடு வைத்துக் கொண்டால் இன்னும் நல்ல பலன்கள் கிட்டும்.

அந்த வகையில் இறைவன் பாதத்தில் வைத்து எடுத்த இந்த வாசனை திரவியத்தை நீங்கள் தினமும் பூசி உங்களை நறுமணத்தோடு வைத்துக் கொள்வதால் பாசிட்டிவ் எனர்ஜியுடன் காணப்படுவீர்கள். இந்த பாசிட்டிவ் எனர்ஜி நீங்கள் வேண்டிய வேண்டுதல்களை உடனடியாக பலிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + fifteen =

Most Popular