ஆன்மீகம் அறிவோம்

32

வில்வப் பிரியை (வில்வத்தை விரும்புபவள்) என்பது லட்சுமியை குறிக்கும்.
🚩செவ்வாய், சனி கிரகத்தின் தொல்லைகளை நீக்கும் பெண் தெய்வம் மகாலட்சுமி.மகாலட்சுமி கிரக தோஷங்களை நீக்கும் சக்தி படைத்தவள் என்று சொல்லும் நூல் ஸ்ரீசூக்தம்.அதை எழுதியவர்
மகாகவி வேங்கடாத்வரீ.
🚩இரு கை கொண்டு வாங்க வேண்டிய பொருட்கள் புத்தகம்,வெற்றிலை பாக்கு,திருநீறு,தங்க நகை,உடை.
🚩வீட்டில் லட்சுமி தங்க ஆதிசங்கரர் அளித்துள்ள ஸ்தோத்திரம்
கனகதாராஸ்தவம்.
🚩பாற்கடலில் லட்சுமியின் அருகில் நிற்கும் மரங்கள்
பாரிஜாதம்,கற்பகதரு.
🚩”விஜயா’ என்ற பெயர் ராஜலட்சுமியை குறிக்கும்.
🚩பட்சிராஜர் என்று போற்றப்படுபவர் கருடாழ்வார்.கருடனின் அம்சமாகப் பிறந்த ஆழ்வார் பெரியாழ்வார்.
🚩வாசுதேவன் என்பதன் பொருள்,எங்கும் நிறைந்தவன்.
🚩அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம் திருவானைக்காவல்.
🚩தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன் கஞ்சனூர் அக்னீஸ்வரர்.(தஞ்சாவூர் மாவட்டம்)
🚩புகழ் பெற்ற அனுமன் சாலிஸாவைப் பாடியவர் துளசிதாசர்.
🚩முருகனுக்கு மலரால் உண்டான பெயர் கடம்பன்(கதம்ப மலர் முருகனுக்கு உகந்தது).
🚩விஷ்ணு மூர்த்தமாக சாளக் கிராமம் கல்லை பூஜிப்பர்.
🚩சிவன் “அம்மா”என்று அழைத்தது
காரைக் காலம்மையார்ரை.
🚩தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர் திருநாவுக்கரசர்.
🚩வாழ்நாளில் ஒரு முறை கூட பழநியைத் தரிசிக்காதவர் பாம்பன் சுவாமிகள்.
🚩ராமானுஜரை 18 முறை வரவழைத்த பின் உபதேசித்தவர் திருக்கோஷ்டியூர் நம்பி.
🚩இந்திரனின் மகன் சயந்தன் வழிபட்ட சிவன் திருப்புத்தூர் திருத்தளிநாதர்(சிவகங்கை மாவட்டம்).
🚩முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம் திருக்கருக்காவூர்.
🚩பஞ்ச சபைகளில் சித்திரசபை எனப்படுவத குற்றாலம்.
🚩தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம் திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில்.
🚩தன்னைக் கொல்ல வந்தவரையும் வணங்கியவர் மெய்ப் பொருள் நாயனார்.
🚩தடாதகை என்னும் பெயரில் வளர்ந்தவள் மதுரை .
🚩குமரகுருபரர் முருகன் மீது பாடியது,முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்.
🚩குசேலர் வாழ்ந்த அவந்தி மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ளது.(தற்போது உஜ்ஜயினி)
🚩அலங்காரத்தில் விருப்பம் கொண்ட முருகன் அருளும் தலம் திருச்செந்தூர்.
🚩சூர்ப்பனகை என்பதன் பொருள்,முறம் போன்ற நகம் கொண்டவள்.
🚩சூரியனுக்கு ஆற்றல் தரும் காயத்ரி மந்திரத்தை உலகிற்கு வழங்கியவர் விஸ்வாமித்திரர்.சூரியவம்சத்தில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் ராமாவதாரம்.
🚩விசாலாட்சி என்பதன் பொருள் அகன்ற கண்களைப் பெற்றவள்.
🚩நாட்டரசன் கோட்டையில் (சிவகங்கை) அருளும் தேவி,கண்ணுடைய நாயகி.
🚩சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள் ருத்ராட்சம்.
🚩ராம சகாயன் என்று அழைக்கப்படுபவன் சுக்ரீவன்.
🚩ராவணனின் அழிவிற்கு விதையிட்டவள் சூர்ப்பனகை.
🚩விஸ்வமித்திரரின் கட்டளையால் ராமன் தாடகையை கொன்றார்.
🚩சீதைக்கு அசோகவனத்தில் உதவி செய்த அரக்கி திரிஜடை.
🚩இந்திரஜித்தின் தாய் மண்டோதரி.
🚩ரகுவம்சத்தின் குலகுருவாக இருந்தவர் வசிஷ்டர்.
🚩ராமாயணத்தில் கரடி முகத்துடன் இருப்பவர் ஜாம்பவான்.
🚩புதனுக்குரியசிவன் கோவில் திருவெண்காடு.(நாகப்பட்டினம் மாவட்டம்)
🚩திருவாய் மொழி பாடியவர் நம்மாழ்வார்.
🚩சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார்.
🚩சரவணன் என்பதன் பொருள்,நாணற் காட்டில் பிறந்தவன்.
🚩நூபுர கங்கை தீர்த்தம் அழகர் கோவிலில் உள்ளது.
🚩யசோதையாக கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடியவர் பெரியாழ்வார்.
🚩திருச்சாத்து உருண்டை என்னும் மருந்து வழங்கும் தலம்,வைத்தீஸ்வரன் கோவில்.
🚩மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல் 64.
🚩தெய்வீகமான வடகிழக்கு திசையை,ஈசானம் என்று குறிப்பிடுவர்.
🚩பிரகலாதனுக்கு தாயின் கருவிலேயே உபதேசித்தவர் நாரதர்.
🚩’விழிக்கே அருளுண்டு’ என்று அம்பிகையைப் பாடியவர் அபிராமி பட்டர்.
🚩சுப்ரபாதம் என்பதன் பொருள்”நல்ல காலை வேளை”.
🚩கூடற்கலாப மயில் எனப்படும் அம்பிகை மீனாட்சி அம்மன்.
🚩ஆழ்வார்களில் அமர்ந்தபடி காட்சியளிப்பவர் நம்மாழ்வார்.
🚩தட்சிணேஸ்வர காளியுடன் நேரில் பேசிய அருளாளர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
🚩தாமரையின் பேரால் குறிக்கப்படும் சங்கரரின் சீடர் பத்மபாதர்.
🚩சென்னை காளிகாம்பாளை வழிபட்ட மன்னர் சத்ரபதி சிவாஜி.
🚩வயலூர் முருகனை இஷ்ட தெய்வமாக போற்றியவர் வாரியார்.
🚩அன்னத்தின் பெயரோடு சேர்த்து வழங்கப்படும் தலம் திருச்சோற்றுத்துறை.
🚩பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான் மதுரை “சொக்கநாதர்”.
🚩தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்,திருச்சி “தாயுமானவர்”.
🚩மார்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த சிவஸ்தலம்
திருக்கடையூர்.
🚩பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம் திருச்செங்கோடு.
🚩பஞ்ச பூதங்களில் காற்றுக்குரிய சிவன் வீற்றிருக்கும் தலம் காளஹஸ்தி.
🚩அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம் திருவானைக்காவல்.
🚩அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோவில் திருவண்ணாமலை.
🚩காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம் திருவாலங்காடு நடராஜர் கோவில்.
🚩கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோவில்கள்..
திருவையாறு ஐயாறப்பர்,சிவசைலம் சிவசைலநாதர் கோவில்.
🚩மதுரையில் நடராஜர் ஆடிய தாண்டவம்,சந்தியா தாண்டவம்.
🚩ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம் கேதார்நாத்.
🚩மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்..திருநெல்வேலி,திருவெண்ணெய்நல்லூர்.
🚩சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்,திருவாடானை.