Thursday, October 19, 2023
HomeArthamulla Aanmeegamமோட்சம் தரும் ஜெயா ஏகாதசி... கூடுதல் பலன்களை பெறுவது எப்படி?

மோட்சம் தரும் ஜெயா ஏகாதசி… கூடுதல் பலன்களை பெறுவது எப்படி?

ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு தனிப்பட்ட பலனும் உண்டு. மாசி மாத வளர்பிறை ஏகாதசி ஜெயா என்றும், தேய்பிறை ஏகாதசி ஷட்திலா என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.
🌿 ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசேஷமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும், சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.
🌿 ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழ், பிரம்மஹஸ்தி தோஷம், நோயற்ற வாழ்வு, நன் மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுமையில் வைகுண்டவாசம் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.
ஜெயா ஏகாதசி :
🌿 ஒவ்வொரு ஏகாதசி விரதமும், பொதுவான பலன்களை அளித்தாலும், தனிப்பட்ட பலன்களையும் சேர்த்தும் வழங்குகிறது. அந்த வகையில், மாசி மாத வளர்பிறை ஏகாதசி வழிபாடு, முன்னோர்களின் முக்திக்கு வழி வகுக்கும்.
குலத்தை காக்கும் குலதெய்வத்தை மறவாதீர்கள்..
🌿 பிரம்மஹத்தி தோஷம் தாக்கியிருந்தால் நீங்கும். வாழ்வில் விரக்தி நிலையை நீக்கும். அகால மரணமடைந்தவர்கள் மோட்சம் பெற மாசி மாத ஏகாதசி வழிபாடு உதவும்.
🌿 ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, அனைவரும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம். முக்கியமாக, பெண்கள் மாதவிடாய் காலத்திலும், பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு காலங்களிலும் கூட, ஏகாதசி விரதத்தை விடாமல் தொடரலாம்.
🌿 சனிப்பிரதோஷம் போல பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்கள் அன்று வரும் ஏகாதசியும் முக்கியத்துவம் பெற்றது.
🌿 ஏகாதசி அன்று கடவுளை வழிபட சிறப்பான பூஜைகளை மேற்கொள்வது நல்லது. ஆனாலும் இயலாதவர்கள் ஏகாதசி அன்று உண்ணாமல் விரதம் இருப்பதால், உடல் சோர்வை அதிகரித்துக் கொள்ளாமல் வீட்டிலேயே இறைவனை தியானித்து, விஷ்ணு புராணம், பாகவதம் போன்றவற்றை படிக்கலாம்.
🌿 உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக கொண்டு, பரமாத்மாவை மனதில் உருவேற்றிக் கொண்டே இருந்தால் விஷ்ணுவின் அருளைப் பெறலாம்.
பலன்கள் :
🌿 ஜெயா ஏகாதசியில் தானமளிப்பது, யாகம் செய்வது மற்றும் புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்றவற்றால் அடையும் புண்ணிய பலனை இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதன் மூலம் கூடுதல் பலனாக ஒருவர் அடைவார்.
🌿 இந்த ஏகாதசியை நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அனுஷ்டிப்பவர் என்றென்றும் வைகுண்டத்தில் வாழ்வார். இந்த ஏகாதசியின் பெருமைகளைப் படிப்பதாலும், கேட்பதாலும் ஒருவர் அஸ்வமேத யாகத்தின் பலனை அடைவார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 8 =

Most Popular