கால சர்ப்பதோஷம்

223

தோஷம் என்றால் சமஸ்கிருத மொழியில் குறைபாடு அல்லது இழப்பு என்று பெயர். ஆதாவது ஜெனன கால சக்கரத்தில் அனைத்து கிரகங்களும், ராகு மற்றும் கேது என்ற இரண்டு சர்பங்களின் பிடியில் மாட்டி கொள்வது கால சர்ப்ப தோசம் என்று ஜோதிடம் கூறுகிறது.
இதன் சூட்சுமம் என்னவென்றால், ராகு மற்றும் கேது என்பது நம் முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை குறிக்கும் ஒரு குறியீடு என்பதே . ராகு என்பது அதிவேகமாக பரவி செல்வது அல்லது கட்டுபாடில்லா வேகம் என்றே சமஸ்கிருதத்தில் பொருள். அடக்கமுடியாத போகத்தின் உருவாக வரும் ராகு நம் முன்னோர்களின் ஆதாவது தந்தை வழி தந்தை செய்த இயற்கைக்கு புறம்பான பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த இயற்கைக்கு புறம்பான பாவங்களையும் காட்டுகிறது.
இதில் இன்னொரு சூட்சுமம், கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய் வழி பாவத்தை குறிக்கிறார். ராகு சூரியனை பாதிப்பதால், தந்தை வழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை அறியலாம்.
தற்கால அறிவியல் படி கூறவேண்டுமென்றால், மனித ஜீனில் அடிப்படைகளாக இருக்கும் 46 குரோமோசோம்கள் ராகு கேது கலவைகள் ஆகும். குரோமோசோம்கள் என்பவை ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரைவியாதி இதுபோன்ற அனைத்து குணங்களும் பதிவாகி உள்ளது.
ஆதாவது 23 குரோமோசோம்கள் தந்தை வழி குறிப்பவை (ராகு) மற்றும் 23 குரோமோசோம்கள் தாய் வழி குறிப்பவை (கேது). இதில் இருந்து நம் ஜோதிட ரிஷிகள் எந்த அளவு அறிவியல் திறன் பெற்றவர்கள் என அறியலாம்.
ராகுவும் கேதுவும் வட மற்றும் தென் துருவங்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. இரண்டும் ஒன்றுகொன்று எதிரெதிர் குணங்களை கொண்டவைகள். அவ்வாறு இரண்டு வெவ்வேறு குணாதிசயம் பெற்ற இரு உருவமற்ற சாயா கிரகங்களிடையே மாட்டும் மற்ற கிரகங்களின் நிலைமை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ராகு கருநாக பாம்பாகவும், கேது செம்பாம்பாகவும் ஜோதிடம் கூறுகிறது. சுருங்க கூறினால் மனதின் (சந்திரன்) ஆசைகளை களையும் நிழல் கேது. பரமாத்மாவை (சூரியனை) கெடுக்கும் நிழல் ராகு.
இவ்வாறு, மனித உடலில் இருக்கும் ஜீன்களின் நம் பரம்பரை தன்மை குறிப்பவை ராகு மற்றும் கேது ஆகும். பாவங்களை சுமக்கும் ராகு கேது என்னும் இரு சர்பங்கள் மத்தியில் மாட்டும் அனைத்து கிரகங்களும் பலம் இழக்கிறது. அதனால், இவ்வளவு பெரிய யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் அந்த யோகம் தரும் கிரகங்களின் திசை புத்திகள் ஜாதகரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொடுப்பதில்லை.
ஒரு ராசியில் 1.5 ஆண்டுகள் இருந்து, 12 ராசிகளை கடக்க (12 X 1.5 = 18) அவை 18 ஆண்டுகள். அவ்வாறு ராகு 18 ஆண்டுகள் மற்றும் கேது 18 ஆண்டுகள். ஜாதக கால சக்கரத்தை கடக்க 36 ஆண்டுகள் எடுத்து கொண்டு முழுமையாக தன் சுற்றை முடித்து தோஷ நிவர்த்தி தருகிறது.
36 ஆண்டுகள் கழித்து, ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை தருகிறது. திருமண தடை, வேலையின்மை, நோய் எதிப்பு சக்தி குறைதல், அதிஷ்டம் இன்மை, குடும்பத்தில் குழப்பம், உறவினர்களுடன் ஒற்றுமை இன்மை என பல மன நிமைதியை இழக்கும் நிகழ்வுகளை தருகிறது.
எனவே ஜாதக பலன்களை தகுந்த நேரத்தில் தாராமல், சர்ப்பம் என்னும் ராகு கேதுக்களால் காலம் தாழ்த்தி தரபடுவதால், இது கால சர்ப்ப தோஷம் என்று பெயர் பெற்றது.
ஆதாவது முன்னோர்கள் செய்த பாவங்களை ராகு என்னும் பாம்பின் வாயின் பிடியில் சிக்கி வேதனை பட்டு 36 ஆண்டுகள் கழித்து, கேது என்னும் பாம்பின் பல அனுபவங்கள் பெற்று வால் பகுதியில் தோஷ நிவர்த்தி கிடைக்கிறது.
உண்மையில் கால சர்ப்ப தோசம் என்பது பாம்புகளால் உருவாக்கவில்லை. ஜோதிடத்தில் அனைத்தும் ஒரு வகை குறியீடுகளே ராகு கேது என்பது கொடிய பலன்களை தரும் கிரகங்கள் என்பதால் அவை சர்ப்பன்களுக்கு ஒப்பிடு செய்யபடுகின்றன. இவை உங்கள் மூதாதையர் செய்த பாவங்களே. அவற்றை போக்க இறை வழிபடு, யோக சித்தி அடைந்த சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதி வழிபாடு,தான தர்மங்கள், குல தெய்வ வழிபாடு, நம் முன்னோர்களின் காலில் விழுந்து ஆசி பெறுதல் இவை எல்லாம் ராகு கேதுவால் உருவாகும் கெடு பலன்களை தாங்கும் சக்தியை நம் உடலுக்கு மனதுக்கும் அளிக்கிறது.
முடிவாக, ராகுவும் கேதுவும் தரும் அனைத்து தோஷங்களும் முன்னோர்கள் வழி வந்தவை என்பதை மனதில் கொள்க. அதனை முறையாக இறைவழிபாடு மூலமும், சித்தர்கள் அருள் பெற்றும் தோச நிவர்த்தி அடையலாம். நிகழ காலத்தில் செய்யும் நல்ல செயல்கள், தோச நிவர்த்திக்கு செய்யும் பிராத்தனைக்கு உறுதுணையாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. கால சர்ப்ப தோசம் கூறும் விடயம் என்னவெனில், தற்காலத்தில் நாம் செய்யும் பாவம், நம் சந்ததிகளை ராகு மற்றும் கேது உருவில் பாதிக்கும் என்பதே.