விசா கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!
ஃபாரினுக்கு செல்ல வாய்ப்பிருந்தும், விசா கிடைக்கலயே என்று ஏங்கும் வாலிபர்கள் முதலில் சில்குர் என்று பாஸ்போர்ட் பாலாஜியை தரிசனம் செய்துவிட்டு எம்பஸிக்கு சென்றால் விசா ஈஸியாக கிடைச்சிடும்.
ஹைதராபாத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் சில்குர். இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனை சில்குர் (சில்கூர்) பாலாஜி என்று அழைக்கின்றனர். ஆனால், பாஸ்போர்ட் பாலாஜி, விசா காட் என்றால் தெரியாதவர்கள் எவரும் இலர்.
படிப்புக்கும் சரி, வேலைக்கும் சரி வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் எத்தனையோ பேர். ஆனால், விசா பிரச்சனை வருமே என்று அச்சப்படுபவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் ஒரு நாள் சில்குர் சென்று அங்குள்ள வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தாலே போதும். கண்டிப்பாக அதற்குரிய பலன் கிடைக்கும்.
முதல் முறையாக பாலாஜியை தரிசனம் செய்ய வருபவர்கள் பாலாஜியை வேண்டிக்கொண்டு 11 முறை பிரகாரத்தை வலம் வர வேண்டும். அடுத்து பிரார்த்தனை நிறைவேறிய பிறகு 108 முறை கோயிலை சுற்றி வர வேண்டும். திருப்பதி வந்தா திருப்பம் என்கிற மாதிரி, சில்குர் சென்றால் விசா கிடைக்கும் என்பது ஐதீகம்.
கிட்ட்த்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு, ஹைதராபாத் அருகிலுள்ள கிராமத்திலிருந்த வயதான பெரியவர் ஒருவர் ஆண்டு தோறும் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் திருப்பதிக்கு செல்ல புறப்பட்டபோது அவரால் தொடர்ந்து மேற்கொண்டு செல்ல முடியவில்லை.
பேருந்து வசதி இல்லாத பழங்காலத்தில் திருப்பதிக்கு செல்ல முயன்று வயதான அவரால் நடக்க முடியாமல் வழியிலேயே மயக்கமடைந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய இறைவன, எதற்கு என்னை தரிசிப்பதற்கு இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வருகிறாய்? இதே ஊரில் புதுர் மண்டியிருக்கும் ஒரு இடத்தில் நான் தோன்றுவேன்.
அப்போது என்னை பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறி மறைந்தார். இதையடுத்து மயக்கத்திலிருந்து எழுந்த அவர், ஊர் மக்களின் உதவியுடன் இறைவன் கூறிய இடத்தில் இருந்த புதர்களை அகற்றி கடப்பாறையில் ஏதோ ஒன்று இடறவே, சுயம்புத் திருமேனியாக பத்மாவதி சமேத பெருமாள் விக்ரகம் ஒன்று இருந்தது. பெருமாளின் சிலையை ஆனந்த கண்ணீருடன் தாவி எடுத்தவர், அங்கேயே கொட்டகை போட்டு சிறு கோயிலைக் கட்டினார்.
இப்போதும் இந்த பெருமாள் விக்ரகத்தில் நெற்றியில் கடப்பாறை பட்ட தழும்பு உள்ளது. இந்த பெருமாள் பாஸ்போர்ட் பாலாஜி என்று அழைக்கப்படுகிறார். இந்த பாஸ்போர்ட் பாலாஜியை தரிசித்து பலன் பெற்ற ஆயிரக்கணக்கானோர் இப்போது அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.
