Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalதெய்வத்தின் குரல்

தெய்வத்தின் குரல்

பெரியவா பேசுகிறார்,,,,,

” யாருக்குமே தெரியாத சுப்ரமணிய அவதாரத்தைப் பற்றி சொல்லப் போகிறேன்…

சுப்ரமண்யராக வருவதற்கு முன்னால் அவர் யாராக இருந்தார் என்று இந்தக்

கதை சொல்லுகிறது,,,இது எனக்கு எப்படித் தெரியவந்தது என்பதே ஒரு கதை

மாதிரித்தான்,,,

வியாசர் “பிரம்மஸூத்திரத்தில்” எழுதியதை ஆதி சங்கரர் “பிரம்மாவின் மானஸ

புத்திரரான ஸனத்குமாரர்கூட பிரும்மாவுக்கு வரம் கொடுத்து விட்டு அதற்காக

ஸ்கந்தனாகப் பிறந்தார்,,,,” என்று சொல்லி இருக்கிறார்,,,”திரிபுரா ரகஸ்யம் “என்ற

கிரந்தத்தில் இந்த சம்பவம் சொல்லியிருக்கிறது,,,,

பிரும்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் சளத்குமாரர்,,, ஸ்வப்னத்தில்ஒரு நாள்

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் சனத் குமாரர் தேவசேனாதிபதி

யாக யுத்தம் செய்து அசுரர்களை சம்ஹரிக்கிறார் ,,,, தன் தகப்பனார் பிரும்மாவிடம்

கூறியவுடன் அவர் ” நீ கண்டிப்பாக இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப்

போகிறாய் ” என்றார்,,,,

ஸனத்குமாரர் கடவுளைத் தன்னில் அநுபவித்துக் கொண்டு இருந்தார்,,,, இவர்

ஸ்வப்னம் பலிக்க வேண்டுமென்றே பரமேஸ்வரன் பார்வதி சமேதராக இவருடைய

ஆசிரமத்துக்கு வந்து விட்டார்,,,, “இன்னொரு ஜன்மாவில் நீ எனக்கு புத்திரனாகப்

பிறக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்,,,,,சனத்குமாரரும் ஒப்புக் கொண்டார்,,,

அவர் ஈஸ்வரனைப் பார்த்து ” உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன் “என்றார்,,,

பார்வதிக்கு உடன்பாடில்லை,,,

ஆதியில் பரமேஸ்வரன் பஸ்மாசுரனுக்கு “அவன் யார் தலையிலும் கை வைத்தால்

அவர் பஸ்மமாகி விடுவார் ” என்று கொடுத்த வரத்தை பரமேஸ்வரனிடமே பரீட்சை

பண்ணவர அவர் அந்தர்தானமாகி விட்டார்,,,அம்பாள் ஈசுவரின் பிரிவைத் தாங்க

முடியாமல் அப்படியே உருகி விட்டாள்,,,அவளுடைய சரீரம் உருகி ஒரு குளமாக

ஆகி விட்டது,,,,அதுதான் சரவணப் பொய்கை,!, சரவணம் சாட்க்ஷாத் அம்பாள்

சரீரம்தான்,,,,சரவணப் பொய்கை அழியாமல் இருக்கும்படியாக அநுக்ரஹித்தாள்,,,

அதனால் ஸனத்குமாரர் அடுத்த ஜன்மத்தில் பரமேஸ்வர தேஜஸாக ஜனித்து

விடுவதென்றும் பிறகு அம்பாள் சரவணம் என்ற சரீரத்தில் தாங்கி ” சுப்ரமண்ய

ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்,,,,,,

இதன்படியே பிற்பாடு ஈஸ்வரன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து பொறிகளை

வெளியிட்டார்,, ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர்,, கங்கை தாங்கப்

பார்த்தாள் ,,,,முடியவில்லை,,, பிறகு பரமேஸ்வரன் சொற்படியே கங்கை செய்ய

சரவணபவனாக முருகன் அவதரித்தான்,,,அதனால் முருகனுக்குப் பெயர் சரவணபவன்,,,

ஆதிசங்கரர் “ஸுப்ரமண்ய புஜங்கம் ” என்ற ஸ்லோகம் இயற்றியிருக்கிறார்,,,,

முருகன் என்றால் ஞான பண்டிதன்,,,, அவரைத் திருப்புகழிலும் கந்தரனுபூதியிலும்

அருணகிரி நாதர் சொல்லியிருக்கிறார்,,,

“நானுவேறு எனாதிருக்க நீ வேறு எனாதிருக்க

ஏக போகமாய் நீயு நானுமாய்

இறுகு வகை பரம் சுகமருள்

யானாகிய என்னை விழுங்கி வெறும்

தானாய் நின்றது தத்பரமே,,,

தெலுங்கு தேசத்திலு சுப்ரமண்யரையே ஸர்ப்பமாகப் பாவிப்பதால்தான் பாம்பை

” சுப்பராயுடு ” என்கிறார்கள்,,,,, ஈஸ்வரன் “ஸ்தாணு” வாகவும் அம்பாள் ” அபர்ணா”

வாகவும் இருக்கும்பொது முருகன் விசாகராக இருக்கிறார்,,, “சாகை” என்றால் கிளை,,,

சுப்ரமண்யர் பரம வைராக்யமாக ஞானியாக தண்டாயுத பாணியாக இருக்கிறார்

தேவசேனாசமேதராகக் கல்யாண சுப்ரமண்யராகவும் இருக்கிறார்,,,, வேட ஸ்திரீயான

வள்ளியை இன்னொரு பத்தினியாகக் கொண்டவர்,,,,இவ்விதம் பக்தி செய்வதற்காக

நக்கீரர் ” ஆற்றுப்படுத்திய ” நூல்தான் ” திருமுருகாற்றுப்படை ” ஆறுதலைக் கொடுக்கும்

ஆறுமுகர்,,,,ஆறுபடை வீரர்,!,அவரது வெற்றி நாளான மகாஷஷ்டி துலா மாதத்தின்

ஆறாம் நாள் ,,,,,,கந்தமாதன மலையில் சூரனை வதைத்தார் பழனிமலையில்

ஆண்டியாய் நின்றார்,,,,ஸ்வாமி மலையில் ஞான மொழி பேசினார்,,,,,,

பசு நெய்யை மாவில் வார்த்து ஜோதி விளக்கேற்றினால் நம் மனத்திலும்

அவர் ஞானச் சுடரை ஏற்றி வைப்பார் !

பரமேஸ்வர ஸ்வரூபமான அவருக்கு ” அரன் நாமம் சுழ்க ” “அரஹரோ ஹரா ”

சொல்லி நம் பாபத்தை எல்லாம் எரித்துப் பரமானந்த ஜோதியாக இருப்போமாக !

https://swasthiktv.com/madhura-gaanam-registration/

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

Most Popular