லக்ஷ்மி கடாட்சம் பெற எளிமையான வெள்ளிக்கிழமை பூஜை!

51

லக்ஷ்மி கடாட்சம் பெற எளிமையான வெள்ளிக்கிழமை பூஜை!

வெள்ளிக்கிழமைக்கு முதல் நாளான வியாழக்கிழமை அன்றே வீட்டை மெழுகி சுத்தம் செய்து, விளக்கு மற்றும் பூஜை பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும். அதிகாலையிலே எழுந்து நீராடி, வீட்டை பெருக்கி, வாசல் தெளித்து மாக்கோலம் இட வேண்டும். வீட்டு விளக்கு மற்றும் தெய்வங்களுக்கு சந்தனம் குங்குமம் சாற்றவும்.

பூஜை முறை:

“ஓம் ஒளி வளர் விளக்கே போற்றி” என்று சொல்லியபடி விளக்கேற்றவும். வீட்டில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் விளக்குக்கும் மலர் சாற்றவும். கணபதியை நினைத்து வழிபாடு செய்த பிறகு, அம்பிகையை பூஜிக்கவும். தெரிந்த அம்பிகை போற்றி, துதிகளை சொல்லி அர்ச்சனை செய்யவும். தெய்வங்களுக்கு, பத்தி, தசாங்கம், சாம்பிராணி தூபம் காட்டவும்.

வீடெங்கும் சாம்பிராணி காட்டவும். பின்னர் தீபம் காட்டவும். நைவேத்யமாக வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வடை என ஏதாவது தங்களால் முடிந்தததை பக்தியுடன் சமர்ப்பணம் செய்யுங்கள். நிறைவாக கற்பூர ஆரத்தி காட்டி, நமஸ்காரம் செய்யுங்கள். எனவே சுக்ர வாரம் என்ற வெள்ளிக்கிழமை அன்று அம்பிகைக்கு பூஜை செய்வது மிகவும் விசேஷம் ஆகும் . தொடர்ந்து வெள்ளிக்கிழமை இந்த பூஜை செய்ய, நோய், கடன், வறுமை தீரும். சந்தோஷமான வாழ்வு கிட்டும்.

ஆகவே வீண் பேச்சுகளை தவிர்த்து, அன்று முழுவதும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தேவியின் திருநாமங்களையே சொல்லுங்கள்..
அபிராமி அந்தாதி, துக்க நிவாரண அஷ்டகம், துர்கா அஷ்டகம், லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி என தெரிந்த அம்பிகை துதிகளை பாராயணம் செய்யுங்கள்.. அன்னையின் அருள் கண்டிப்பாக கிட்டும்.

இந்த பூஜையை தொடங்கிய சில நாட்களுக்குள்ளே உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நேர்மறை சிந்தனைகள் மேலோங்கி உங்கள் வாழ்க்கை நல்ல வளமாகவும் செழுமையாக்கவும் மாறுவதை நீங்களே உணர முடியும். அத்தகைய சக்தி வாய்ந்தது இந்த வெள்ளிக்கிழமை பூஜை.

பூஜையின் போது சொல்ல வேண்டிய லக்ஷ்மி ஸ்லோகம்:

“ஸ்ரீ தேவீஹி அம்ருதோத்
பூதாகமலா சந்த்ர சோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீச
வராரோஹாச்ச சார்ங்கிணீஹரிப்ரியா
தேவதேவீ மஹாலட்சுமீச சுந்தரி”

லக்ஷ்மி தியான மந்திரம்:

நமாமி லக்ஷ்மி பரமார்த்த ஸத்யம்
பவதாபஹாஷிர்ம் வ்யவஹர் பஜம் |
ஸம்பதயித்ரி ஸர்வார்த த்யம் ஸாம்
ஜனனி ப்ரணோமி சததம் பகதாத்மரூபம் ||

லக்ஷ்மி பீஜ மந்திரம்:

ஓம் ஹ்ரீம் ஷிர்ம் ஸ்வரலக்ஷ்மி ஶ்ரீம் ஹ்ரீம் பூட் ||