Friday, October 27, 2023
HomeAanmeega Thagavalgalகர்மவினை

கர்மவினை

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?
2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்?
3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?
4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்தபோதிலும் மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களைத் தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனைக் கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன. அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள். அவனுக்கு சித்தனின் கடவுள் நம்பிக்கையைக் கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.இதன் காரணமாக சித்தன் இறைவன் மீது தனது பக்தி உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான்.

சிரித்துக் கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான். போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் வித்தனோ காட்டிற்கு சென்று வரும் வழியில் உட்கார்ந்த இடத்தில் எதோ உறுத்துவது போல் இருந்ததனால் என்ன? என்று விலக்கிப் பார்த்தான். கணக்கிட முடியாத செல்வம் அங்கு புதைக்கப் பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாகக் கட்டிக் கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன் படுத்த படுக்கை ஆக்கிவிட்டது விதி. சித்தனின் மனைவி அவனை விட்டு நீங்கினாள். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை. எப்படியோ எழுந்து சித்தன் தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. அவனை தன்னோடு அனைத்து கொண்டது.

சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாகப் பிறந்திருந்தாலும் முன் பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய். நீ உன் மனைவியை மதித்தது கூட கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான், அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின் பெருபாலான வற்றை நானே ஏற்று கொண்டேன்,. ஆன்மீகத்தைத் தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவப் பதிவையே அனுபவிக்கத் தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்த பின் அவன் பாவப் பதிவுகள் செயல்பட தொடங்கும்.

இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள். நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர். தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான்.
ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க.விதிவிலக்குகளும் உண்டு. அதுதான் “பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தி விடுவது”. நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக் கொள்வோம்.இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில் பட்டு இரத்தம் வந்து விடுகின்றது. இதை வினை என்று எடுத்துக் கொள்வோம். நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த கர்ம வினையிலிருந்து தப்பிக்க நினைத்தால் அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன் தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு மாடோ அல்லது வண்டியோ உங்களை குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால் பட வேண்டிய இடத்தில் தப்பிக்க நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே கல்லால் உங்கள் தலையில் அடிபட்டு விடும்.

ஆனால் அவரிடம் மன்னிப்போ அல்லது மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என வைத்து கொள்வோம். அதே விதிதான் செயல்படும். ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு. எப்படியென்றால் நீங்கள் அதே தெரு வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள். இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட வேண்டுமோ, அந்தக் கல்லில் உங்கள் காலில் உள்ள சேற்றை துடைப்பதற்காக தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில் அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால் அந்த கர்மவினை அங்கேயே முடிவு பெறுகின்றது. இதைதான் “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது” என்பர் . உங்கள் செயலை கொண்டே வினையும், வினையை கொண்டே எதிர்வினையும், அந்த எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும் நிர்ணயிக்கப் படுகின்றதே தவிர மற்றபடி ஒன்றுமில்லை. இதைத்தான் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்றனர். எந்த செயலுக்கும் வினை ஏற்பட கூடாது என்றால் “நான்” என்பதை விட்டுவிட வேண்டும்.

ஆன்மீகத்தில் இதற்கு பெயர் பூரண சரணாகதி.அந்த விதிவிலக்கு என்பது கூட இவர்களுக்குதான். தன்னை அறிய முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும் சலுகைகள்தான் இது ஏன் ?? எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள். கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்? கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான வினைகள்தான் தற்போது நீங்கள் அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும். புரிதல் ஏற்படும்போது எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை நீங்கள் அடையும் போது, உங்களின் 95% கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர் அனுபவித்து விடுவார்.
காரணம்!! நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிக் கடலை கடந்தவராக இருப்பார்.

ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார். திடீர் என்று அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர் குழாயில் காலை கழுவிவிட்டு சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர் பைத்தியகாரன் என்று தோண்றலாம். ஆனால் அவரைப் பொறுத்தவரை பொருளுக்கும் அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்ம வினைகளை தான் அவர் அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார். இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! அந்த ஞானியைப் பொறுத்தவரை அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது. காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது.அதாவது அவருக்கு மனம் என்ற ஒன்று கிடையாது!! இதுவே ” சும்மா இருப்பது ” என்று சொல்லப்படுகின்றது. மனிதர்கள் தன் தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய கணக்குகளை அழித்து விடுவார். முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர்.

அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும் கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள் கேட்க நினைப்பது கூட சிறியதாக தான் இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே சிறந்தது ஆகும். இதில் பூரண சரணாகதி என்பது இனி அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும்.“நான்” என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் “நீ” என்ற எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி. அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்க வேண்டும். இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 15 =

Most Popular