கிருதயுகத்தில் சிறப்புற்று விளங்கிய *ஸ்ரீ ஆயுர்தேவி* வழிபாடு/உபாசனை., காலப் போக்கில் மக்களின் அசிரத்தையால் மறைந்து விட்டது.
ஒன்பது கரங்களைத் தாங்கி பராசக்தியாம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் அவதாரமாகப் பொலியும் *ஸ்ரீ ஆயுர் தேவி* மக்கள் சேவையே மஹேஸன் சேவையெனத் தியாகம் புரிந்த அருட்பெருஞ் சித்தர்களையும்., மஹரிஷிகளையும்., தம் எண்கரங்களில் ஏந்தி அருள் பாலிக்கின்றாள். அவள்தம் ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகும்.
பொதுவாக சித்த புருஷர்களின் திருஉருவத்தைக் கோயில் தூண்களில்தான் காணலாம். ஸ்ரீ ஆயுர்தேவியை வழிபட., ஸ்ரீ பராசக்தியோடு., சித்த புருஷர்களையும் நமஸ்கரிக்கும் பேறு கிட்டுகிறது. *ஸ்ரீதேவி (சாக்த) உபாசனையில்* உன்னதம் பெற்றவர்கள் சித்த புருஷர்களே..! தம் அடியார்களை வணங்கினால் மகிழும் ஸ்ரீ ஆயுர்தேவி., என்றும் எங்கும் எப்போதும் சிவ சித்தத்தில் திளைக்கும் சித்தர்களின் மூலம் பக்தர்களுக்குப் பரிபூர்ணமாக அருள் புரிவதில் பேரின்பங்கொள்கிறாள். எனவே ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்து துன்பங்களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு சம்பூர்ணமான வழிபாடாகும்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் திருகரங்களின் விளக்கம்….
வலதுகரம் {மேலிருந்து கீழ்} :
1. கயாஸூர மஹரிஷி.,
2.ஆணி மாண்டவ்யர்.,
3. அத்ரி மஹரிஷி.,
4. குண்டலினி மஹரிஷி.
இடது கரம் {மேலிருந்து கீழ்} :
1. அஹிர்புத்ன்ய மஹரிஷி.,
2. சாரமா முனிவர்.,
3. அஸ்தீக சித்தர்.,
4. கார்க்கினி தேவி., சம்வர்த மஹரிஷி
எட்டாவது கரத்தில் அமர்ந்துள்ள கார்க்கினி தேவி., ஸ்ரீ ஆயுர்தேவியின் அருளால் அமுதக் கலசமாக மாறி அருள் புரிபவள். இக்கரத்திலேயே ஸ்ரீசம்வர்த மஹரிஷியும் கலசத்தினுள் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் அற்புதத் தோற்றம்
நவ கரங்களை உடைய ஸ்ரீ ஆயுர்தேவி சிவாம்சம் பூண்ட ஆதிபராசக்தி., வல இடப்புறங்களில் நான்கு கரங்களை கொண்டவள். ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாக விளங்குகிறது.
எட்டு கரங்களிலும்., சித்தர்கள் மஹரிஷிகள் கலியுக மக்களின் பல்வேறு வகையான துன்பங்களைக் களைவதற்கெனப் பல அற்புதமான தவங்களைப் புரிந்து தெய்வாவதாரங்களிடமிருந்து பெற்ற வரங்களையும் சாந்தமான முறையில் எதிர்த்துச் சித்த புருஷர்களின் அருட் பெருந்தவத்தால் அவற்றைக் களைவதோடு மட்டுமின்றி தீவினைகள் மீண்டும் அணுகா வண்ணம் பல பிராயச்சித்த முறைகளையும் அவர்கள் மூலம் அருள்பவளே ஸ்ரீ ஆயுர்தேவி..!!
ஸ்ரீ ஆயுர்தேவியின் அன்னவாஹனமான சுவாரோஸிஷன் என்னும் மஹா தபஸ்வி ஸ்ரீமன் நாராயணனை உபாசித்து மஹரிஷியானவர். அவர் ஸ்ரீ மஹா விஷ்ணுவையே சாக்ஷாத் சிவபெருமானாக எண்ணித் தரிசனம் பெற விழைந்த போது, தேவி உபாசனை மூலமாகவே எம்மை ஸ்ரீ சிவபெருமானாக வரித்துத் தரிசனம் செய்ய இயலும் என்று ஸ்ரீ பெருமாள் அருளிடவே சுவாரோஸிஷ மஹரிஷி ஸ்ரீதேவி உபாசனையில் திளைத்து அன்னவாஹனமாக அமையும் பேறு பெற்றார்.
