வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா? இத்தனை நாள் தெரியாம போச்சே!
உடல் வலி நீங்கும்:
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறது என்றால், முதலில் வெந்நீரில் குளிக்க வேண்டும். அதன் பிறகு வெந்நீரில் கொஞ்சம் சுக்குத் தூள், பனங்கற்கண்டு போட்டு குடிக்க வேண்டும். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க் கசப்பு மறைந்து விடும். அதோடு உடல் வலியும் நீங்கும்.
நெஞ்சு எரிச்சல் குணமாகும்:
ஏதாவது எண்ணெய் பலகாரம், ஸ்வீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீரை மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் சரியாகிவிடும்.
சதை குறையும்:
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படியான சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
காலைக்கடன் சரியாக முடிய ஒரு டம்பளர் வெந்நீர் குடித்தால் போதும் எல்லா பிரச்சனையும் சரியாகும்.
கால் பாதங்கள் வலிக்கிறதா?
வெளியில் சென்று அலைந்து திரிந்துவிட்டு வீட்டிற்கு வந்தால் ஒரே கால் வலியாக இருக்கும். அப்போது, ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு தாங்கும் அளவிற்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக் கல்லைப் போட்டு கொஞ்ச நேரம் கால் பாதத்தை வைத்து எடுக்க வேண்டும். காலில் அழுக்கு இருப்பது போன்று தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.
மூக்கு அடைப்புக்கு சிறந்த மருந்து:
வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு சரியாகும். வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போது வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.
திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.
ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு
அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
தரையை துடைக்கும் போது
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்.
திடீரென்று கடுமையான தலை வலியா?
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்த வேண்டும். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.
