ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !

52

மந்திரத்தின் மகிமை

நம் எல்லோருக்கும் தெரியும் ஹனுமான் ஒரு சிறந்த ராம பக்தர் ராம நாமத்தை மட்டுமே பாராயணம் செய்பவர் சிரஞ்சீவியான வாயுபுத்திரன் ராம நாமமே அவரின் உயிர் மூச்சு . ராமநாமம் வானத்தை விட சிறந்தது என நிரூபித்தார் அப்படி பராக்கிரமசாலியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் ஒரு நாள் ஒரு அரசருக்கு அடைக்கலம் கொடுத்தார் அவரை எந்த சக்தியிடமிருந்து காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்தார். இப்படி இருக்க ராமபிரானை அந்த அரசனை ஆஞ்சநேயரிடம் இருந்து மீட்க ஒரு யுத்தத்தை மேற்கொண்டார் அது ராம ஆஞ்சநேய யுத்தமாக உருவெடுத்தது ஆஞ்சநேயர் தன் வாலை சுருட்டி அதில் அந்த அரசனை பத்திரப்படுத்தி அந்த வாலின் அரியணையில் அமர்ந்து “ராம ராம” என்று தியானம் மேற்கொண்டார். ராம பானங்கள் பறந்தன ஆனால் அவை ஆஞ்சநேயரை ஒன்றுமே செய்யவில்லை எல்லாம் பூமாலைகள் ஆக விழுந்தன ராமரை முன்நின்று போரை நடத்தியும் ராம நாம ஜெபம் நடத்தியதால் ஆஞ்சநேயர் தான் வெற்றி பெற்றார் அவரே ஒப்புக்கொள்கிறார்

இன்னொரு கதையும் உண்டு ராமாயணத்தில் விபீஷணன் அயோத்தி மாநகருக்கு ராம பட்டாபிஷேகம் கண்டு பின்னர் இலங்கைக்கு புறப்படும் வேளையில் ஒரு நண்பர் இலங்கையை சுற்றி பார்க்க ஆசை உள்ளது என்று கூறியதால் புஷ்பக விமானத்தில் அவனையும் அழைத்துக்கொண்டு இலங்கைக்கு சென்றார் அரசின் விருந்தினராக பல நாட்கள் அங்கேயே தங்கி எல்லா இடங்களிலும் சுற்றிப் பார்த்தார். இலங்கையில் தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்த பின்னர் அவர் அயோத்திக்கு செல்ல ஆசைப் பட்டார் கடல் கடந்து போக முடியவில்லை வினாவினார் நான் எவ்வாறு கடலை கடந்து போக முடியும் அதற்கு ஒரு மகா மந்திர ஓலையை அவர் இடையில் கட்டிவிட்டார் அந்த ஓலையை வழியில் எடுத்து பிடிக்காமல் கரை சேரும் கரை சேர்ந்ததும் அந்த ஓலையை எறிந்து விடவும் என்று கூறினார் அப்படி நீ பிரித்துப் படித்தால் நீரில் மூழ்கிப் போவாய் என்றும் கூறி அனுப்பினார் அவன் அந்த மந்திர மூளையை இடையில் பத்திரமாக முடித்துக்கொண்டார் பின்னர் ஒவ்வொரு அடியாக எடுத்து நடக்க ஆரம்பித்தான் அவனால் அந்த ஆச்சரியத்தை தாங்க முடியவில்லை தரையில் நடப்பது போலவே உணர்ந்தான் பெண் வேகமாகவும் ஓட்டம் நடந்து முன்னேறினார் பல காத தூரம் கடந்து இயற்கையின் அழகை ரசித்து கடல் வாழ் உயிரினங்களை பார்த்துக் கொண்டே நடந்து சென்றார் எப்படிப்பட்ட மகாமந்திரம் தன்னை இந்த மகா சமுத்திரத்தையும் கிடக்க வைத்து விட்டதே என்ற ஆச்சரியம் தாங்க முடியவில்லை அவரால் இந்த ஓலையில் என்ன தான் இருக்கிறது என்ற ஆவல் மிகுதியால் அதை எடுத்துப் பார்க்க முற்பட்டார் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா என்று அந்த ஓலை பிடித்தார் அதில் ராமமந்திரம் மட்டுமே இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டார் இந்த இரண்டு எழுத்து மந்திரம் தான் இவ்வளவு பெரிய சமுத்திரத்தை கடக்க வைத்தது என்று நினைப்பதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கினார் அந்த மந்திர ஓலை கையில் இருந்ததால் நீந்தி கரையை சேர்ந்தார் என்பது தான் அதன் சுவாரஸ்யம் இதற்கு அந்த ராம நாம மகிமையை காரணம்.