Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalவைகாசி விசாகம் சிறப்புகள்

வைகாசி விசாகம் சிறப்புகள்

விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர்.வி என்றால் பட்சி (மயில்) என்றும்,
#சாகன் என்றால் #பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது. முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் ஆகும்.

வைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது.
எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வதால் நோய் நீங்கி நீடித்த ஆயுள் கிடைப்பதாகக் கருதப்படுகிறது.மகாபாரதத்தின் வில் வீரான அர்ஜுனன் பாசுபத_ஆயுத்தை சிவபெருமானிடமிருந்து பெற்ற நாள் வைகாசி விசாகமாகும்.
திருமழப்பாடி என்னும் ஊரில் சிவபெருமான் மழு_ஏந்தி_திருநடனம் புரிந்ததும் இந்நாளே. பன்னிருஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார்_பிறந்த தினமும் இந்நாளே ஆகும்.

சோழ சக்கரவர்த்தியான ராஜராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல்_வழங்கிட ஆணையை ராஜேந்திரச் சோழன் பிறப்பித்து இருந்ததாக தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.வடலூரில் ராமலிங்க அடிகளார் சத்யஞான சபையை நிறுவியதும் இந்நாள் தான். பெரும்பான்மையான கோவில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று பிறப்பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.

வான்மீகி இராமாயணத்தில், விஸ்வாமித்திரர் இராம-லட்சுமணர்களுக்கு குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறுவார். மேலும் இதனை கூறுபவர் மற்றும் கேட்பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக சொல்லுவார்.இந்நிகழ்வை குமாரசம்பவம் என்று வான்மீகி குறிப்பிடுவார்.இதனை பின்பற்றியே வடமொழிக் கவிஞரான காளிதாசர் முருகனின் பிறப்பு மற்றும் அவரின் பெருமைகள் பற்றி கூறி அந்நூலிற்கு குமார சம்பவம் என்றும் பெயரிட்டுள்ளார்.

சித்தார்த்தர் என்னும் கௌதம புத்தர் பிறந்த நாளும், அவர் ஞானத்தை அடைந்த நாளும் வைகாசி பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. இதனையே புத்த பூர்ணிமா என்று அழைக்கின்றனர்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகத்தில் நாமும் விரத முறையைப் பின்பற்றி வாழ்வின் உயர்ந்த நிலையை அடைவோம்.
வைகாசி மாதம் என்பது #வசந்த_காலம் எனப்படும் இளவேனிற்_காலத்தின்_பிற்பகுதி_ஆகும். எனவே வைகாசி விசாகத்தில் கோயில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.

இளவேனிற் காலத்தில் இவ்விழா நடைபெறுவதால் #திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் கட்டி நிற்கும்படி செய்து இறைவனுக்குச்_சிறுபருப்புப்_பாயாசம், நீர்மோர், அப்பம் முதலியவற்றைப் படைத்து உஷ்ணசாந்தி_உற்சவம் (வெப்பம் தணிக்கும் விழா) என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இங்கு வசந்த மண்டபத்தில் உள்ள நீர்த் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை நீரில் இடப்பட்டு, குமரன் வாயில் இருந்து சிந்திய பாலினை உண்டதால் சாபம் நீங்கப் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவங்களையும் வைத்து சாப விமோசன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + two =

Most Popular