Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 14.12.2020

இன்றைய ராசிப்பலன் – 14.12.2020

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர்கள் அறிமுகம் கிட்டும். தொழிலில் பணியாட்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.

மிதுனம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினை குறையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கப்பெறும்.

கன்னி

இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்

இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். வங்கி மூலம் எதிர்பார்த்த கடன் உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சற்று லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சுப செலவுகள் செய்யும் வாய்ப்பு அமையும். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். வியாபாரத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் புதிய வாய்ப்புகளை பெறலாம்.

தனுசு

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.

மகரம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் உங்கள் பெயர், புகழ், செல்வாக்கு மேலோங்கும். வங்கி சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + nineteen =

Most Popular