Friday, October 27, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் – 15.08.2020

இன்றைய ராசிப்பலன் – 15.08.2020

மேஷம்

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வருமானம் பெருகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் வழியில் உதவி கிட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் சம்பந்தமாக பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

சிம்மம்

இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வருகையினால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை குறையும்.

கன்னி

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

துலாம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும்.  உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தனுசு

இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்

இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படக்கூடும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையற்ற சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.

 

https://swasthiktv.com/madhura-gaanam-registration/

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 19 =

Most Popular