Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 13.06.2020

இன்றைய ராசிப்பலன் – 13.06.2020

மேஷம்
இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்
இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை அடைய முடியும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். பண பற்றாக்குறையால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கடகம்
இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 2.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக நடந்து கொள்வது நல்லது. மதியத்திற்கு பிறகு வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் இருந்த இழுபறி நிலை படிப்படியாக குறையும்.

சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 2.46 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கன்னி
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரி வழியில் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பாராத பணவரவால் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

துலாம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும். வேலையில் கவனமுடன் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

மகரம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும்.
உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப் படும்.

கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

மீனம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். சிக்கனமாக செயல்பட்டால் செலவுகளை சமாளிக்க முடியும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =

Most Popular