Thursday, November 2, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்

காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

மிதுனம்

இனிய மாற்றம் இல்லம் தேடி வந்து சேரும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் மன அமைதி பெறுவீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிட்டும்.

கடகம்

வரவு இருமடங்காகும் நாள். அயல்நாட் டுப் பயணத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வருங்கால நலன்கருதி புதிய திட்டமொன் றைத் தீட்டுவீர்கள. செல்வாக்கு மேலோங்கும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும்.

சிம்மம்

சொல்லைச் செயலாக்கி காட்டும் நாள். மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இடம், பூமி வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

கன்னி

அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடருவீர்கள். முன்னேற்றப் பாதைக்கு முட்டுக் கட்டையாக இருந்தவர்கள் விலகுவர். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.

துலாம்

காரியங்களில் வெற்றி கிடைக்க கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும். திடீர் செலவுகளை சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். நட்பு பகையாகலாம்.

விருச்சிகம்

தொழில் முன்னேற்றத்திற்கு தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும். மாலைநேரம் மகிழ்ச்சி பயணம் உண்டு.

தனுசு

நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள். கொடுக்கல்–வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மறையும். வியாபார விரோதம் விலகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

மகரம்

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புடன் நடந்து கொள்வர்.

கும்பம்

நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி லாபம் சம்பாதிப்பீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கூடும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

மீனம்

வளர்ச்சி கூடி வளம் காணும் நாள். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். மறைமுகப் போட்டிகள் விலகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழில் வளர்ச்சியுண்டு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + thirteen =

Most Popular