நல்ல குணமுடைய வாழ்க்கைத் துணை அமைய வேண்டுமா? இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

337

நல்ல வாழ்க்கைத் துணை அமைந்தாலே போதும். நம்முடைய வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வாழ்ந்து விடலாம். ஒரு பெண்ணுக்கு நல்ல குணம் கொண்ட ஆண் கணவனாக கிடைப்பது வரம். ஒரு ஆணுக்கு நல்ல குணம் உடைய பெண் மனைவியாக கிடைப்பது வரம். இவற்றைத் தவிர ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிப்பது என்பது மிகவும் பாக்கியமான ஒரு விஷயம்தான். உங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்றாலும், மனைவி அமைய வேண்டும் என்றாலும் இருபாலருக்கும் ஒரு சிறந்த பரிகாரத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களின் மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க, உங்களது திருமணம் விரைவாக நடைபெற, மகாலட்சுமியின் இந்த மந்திரத்தை ஆண் பெண் இருவருமே 1008 முறை உச்சரிக்கலாம். உங்களுக்கான மகாலட்சுமி மந்திரம் இதோ!

மகாலட்சுமி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் க்லீம் கமல தாரிண்யை மஹா லஷ்ம்யை ஸ்வாகா:

இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமைதோறும் காலை 6 மணியளவில் மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, ஒரு மரப் பலகையின் மீது அமர்ந்து, உச்சரிப்பது நல்ல பலனைத் தரும். நீங்கள் பெண்ணாக இருந்தால் சிறிதளவு மஞ்சளை புதியதாக வாங்கி வைத்துக்கொண்டு, 1008 முறை இந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யவேண்டும்.

மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய தாம்பூலத்தை வைத்துவிடுங்கள். ஒவ்வொரு முறை மந்திரத்தை உச்சரிக்கும் போதும் அந்த மஞ்சளை எடுத்து ஒரு சிட்டிகை மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது போல அந்த தட்டில் போடவும். இப்படி வாரம் தோறும் இந்த மந்திரத்தை மகாலட்சுமிக்கு உச்சரித்து வரலாம். அந்த மஞ்சளை எடுத்து முகத்தில் தேய்த்து குளிக்க பயன்படுத்திக் கொள்வது சிறந்தது