பருப்பு உருண்டை குழம்பு

625

தேவையான பொருட்கள்:*

உருண்டைக்கு:
1) கடலை பருப்பு – 1 கப்
2) நறுக்கிய வெங்காயம் – 3/4
3) மஞ்சள் தூள் – 1 டீஸ்புன்
4) பச்சை மிளகாய் – 2-4
5) உப்பு – தேவைக்கேற்ப
6) துருவிய தேங்காய் – 2 டீஸ்புன்
7) சோம்பு – 1 டீஸ்புன்
8) எண்ணெய் – பொறிப்பதற்கு

தேங்காய் துவையலுக்கு:
1) துருவிய தேங்காய் – 2 டேபில் ஸ்பூன்
2) நறுக்கிய வெங்காயம் – 1/4

*குழம்பிற்கு:*
1) நறுக்கிய வெங்காயம் – 1 (பெரியது)
2) தக்காளி – 2 (பெரியது)
3) எண்ணெய் – 2-3 டேபில் ஸ்பூன்
4) பட்டை – 1 இஞ்ச்
5) லவங்கம் – 5-8
6) பூண்டு – 3-4
7) இஞ்சி பூண்டு விழுது – 1.5 டீஸ்புன்
8) மஞ்சள் தூள் – 1/2 டீஸ்புன்
9) வீட்டு மிளகாய் தூள் – 1 டேபில் ஸ்பூன்
10) புளி சாறு – சிறிய எலுமிச்சை அளவு புளியில் இருந்து பிழிந்தது
11) உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:*

*உருண்டை செய்முறை:*

1) கடலை பருப்பை கழுவி 1-2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2) கடலைபருப்பு, பச்சை மிளகாய், தேங்காய், சோம்பு ஆகிய்வற்றை மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரவென்று அரைக்கவும்.
3) அரைத்த கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் வெங்காயத்தை சேர்த்து கையால் நன்றாக கலக்கவும்.
4) வீடியோவில் காட்டியது போல, சிறு சிறு உருண்டைகளாய் பிடிக்கவும். டேபில் ஸ்பூனை பயன்படுத்தி ஒரே அளவில் உருண்டைகள் செய்யலாம். கிட்டத்தட்ட 16 முதல் 20 உருண்டைகள் வரும்.

குழம்பு செய்முறை:*

1) புளியை மிதமான சூடு உள்ள 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து சாறை பிழியவும்.
2) நறுக்கிய தக்காளியை மிக்சியில் அரைக்கவும்.
3) மிதமுள்ள நறுக்கிய 1/4 வெங்காயம் மற்றும் தேங்காய், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
4) கடாயில் எண்ணெய் சுடானவுடன், பட்டை, லவங்கம், பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்நிறம் ஆகும் வரை நன்றாக வதக்கவும்.
5) இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும்.
6) மஞ்சள், உப்பு, மிளகாய் தூள் ஆகிவற்றை சேர்த்து சிறிது விநாடிகள் கலறவும்.
7) தக்காளி விழுதை சேர்த்து கடாயை மூடி, 5 நிமிடம் அடுப்பை மிதமான சூடில் வைக்கவும்.
8) தக்காளி வதங்கிய பிறகு, தேங்காய் விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து எண்ணெய் வரும் வரை சமைக்கவும். கிட்டத்தட்ட 7 முதல் 10 நிமிடங்கள் ஆகும்.
9) கடைசியாக புளி சாறை சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும்.
10) சுவையான குழம்பு தயார்!!! ஒரு சில நிமிடங்கள் அப்படியே வைக்கவும். சுவை கூடும்.

செய்முறை 1:* உருண்டையை வேக வைக்கும் முறை

1) குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
2) ஒரு உருண்டையை மெதுவாக குழம்பில் போட்டு கரைகிறதா என்று பாருங்கள்.
ஒரு வேளை கரைந்தால், 2 டேபில் ஸ்பூன் கடலை பருப்பை பவுடர் ஆக்கி உருண்டைக்கான கலவையில் சேர்க்கவும்.
உருண்டை கெட்டியாகும்.
3) உருண்டை கரையவில்லை என்றால், மிதமுள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக மெல்லமாக குழம்பில் சேர்க்கவும்.
ஒரு உருண்டையின் மேல் இன்னொரு உருண்டையை போட்டால் உருண்டை உடைந்து விடும்.
எனவே கவனமாக செய்யவும்.
4) கடாயை மூடி 5 முதல் 7 நிமிடங்கள் வரை சமைக்கவும். அதற்கு மேல் சமைத்தால், உருண்டை மிகவும்
கெட்டியாகி விடும். கலற வேண்டாம். அவ்வபோது கடாயை சுற்றவும்
5) கொத்தமல்லியை சேர்த்து சுடான சாதத்துடன் சாபிட்டால் அமிர்தம் போல் இருக்கும்.

செய்முறை 2:* உருண்டையை பொறிக்கும் முறை:

1) கடாய் சூடான பிறகு, எண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய் சூடான பிறகு, ஒரு சிறிய உருண்டையை எண்ணெயில்
போட்டால், அது உடனே மேலே பொங்கி வரும். அப்படி வந்தால், எண்ணெய் காய்ந்து விட்டது.
2) பிறகு உருண்டைகளை போட்டு பொன்நிறமாகும் வரை பொறிக்கவும்.
3) பொறித்த உருண்டைகளை, கொதிக்கும் குழம்பில் போட்டு 5 நிமிடம் சமைக்கவும்.
4) கொத்தமல்லி சேர்த்து சுடான சாதத்துடன் சாப்பிட்டால் அமிர்தம் போல் இருக்கும்.