மேஷம்
ஆலயவழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வரவு திருப்தி தரும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்
முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரி யம் விரைவாக நடைபெறும். வியாபார போட்டி களை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும்.
மிதுனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். பாக்கிகள் வசூலாகும்.
கடகம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி யாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்யலாமா? என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
கன்னி
கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். மனதில் சந்தோஷம் குடிகொள் ளும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். வருமானம் இருமடங்காகும்.
துலாம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். காரியங்களில் வெற்றி ஏற்படும். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி கைகூடும். பூமி வாங்கும் யோகம் உண்டு. அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.
விருச்சிகம்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலையை உயர்த் திக் கொள்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும்.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
மகரம்
தொட்டது துலங்கும் நாள். திருமண முயற்சி கைகூடும். உற்றார், உறவினர்களின் உதவி கிட்டும். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.
கும்பம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.
மீனம்
பொது வாழ்வில் புகழ்கூடும் நாள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிட்டும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
