Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 22.05.2020

இன்றைய ராசிப்பலன் – 22.05.2020

மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் அறிவுரையால் வியாபார ரீதியான பிரச்சினைகள் நீங்கும்.

சிம்மம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும்.

கன்னி
இன்று பிள்ளைகளிடம் வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.

துலாம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தள்ளிவைக்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். வியாபார வளச்சிக்கான முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கொடுத்த கடன்கள் வீடு வந்து சேரும்.

மகரம்
இன்று உங்களுக்கு பண புழக்கம் சற்று குறைவாக இருக்கும்-. கடன் வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

கும்பம்
இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பண கஷ்டம் சற்று குறையும்.

மீனம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடைய குடும்பத்தினர் உதவியாக இருப்பார்கள். வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − two =

Most Popular