Saturday, October 14, 2023
HomeArthamulla Aanmeegamகுழந்தை பிறக்கும் போது கூடவே பிறக்கும் 5 விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

குழந்தை பிறக்கும் போது கூடவே பிறக்கும் 5 விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

குழந்தை பிறக்கும் போது கூடவே பிறக்கும் 5 விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

இறைவனால் படைக்கப்படும் ஒவ்வொரு உயிரும் அவனது கட்டுப்பாட்டின் கீழ் தான் இந்த உலகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், அதையும் மீறி அவன் வாழும் வாழ்க்கைக்கு ஏற்ப அவனது பாவ, புண்ணியங்கள் கணக்கிடப்படுகின்றன. இறைவனால் படைக்கப்பட்ட உயிர், அவனாலேயே எடுக்கப்படுகிறது.

குழந்தையின் கூடவே பிறக்கும் 5 விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

ஆயுள்: எவ்வளவு முயற்சி செய்தாலும், கோடி ரூபா கொடுத்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது. யாராலயும், எவராலயும் ஆயுளை நீட்டிக்க முடியாது. ஒருவரைத் தவிர, அவர் தான் எம்பெருமான் சிவன்.

வித்தம்: உனக்கு இவ்வளவு தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மீறி உங்கிட்ட இருக்கவே இருக்காது. இவ்வளவு பொருள் தான் அதற்குப் பிராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி காசு கூட சேமிக்க முடியாது, தங்காது.

வித்யா: இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு செய்தாலும், விடிய விடிய படித்தாலும் ஒன்னும் பயனளிக்காது.

கர்மா: தொழில், குணம், மனைவி மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன தொழில் செய்து தான் இந்த ஜீவன் ஜீவிக்கும் என்பது எல்லாம் அவனால் விதிக்கப்பட்டது. வாழ்க்கையில் நாம் கண் கூடாக பார்த்த விஷயங்கள் எத்தனையோ இருக்கும். நல்லவர்கள், கெட்டவர்களாக மாறுவார்கள். கெட்டவர்கள் நல்லவர்களாக மாறுவார்கள். ஏழை பணக்காரனாக மாறுவான், பணக்காரன் ஏழையாக மாறுவான்.

மரணம்: இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில் இந்த ஜீவனுக்கு பிராண வியோகம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை யாரும் ஏமாற்ற முடியாது. யாராலும் மாற்ற முடியாது.

உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கொஞ்ச நேரத்திற்கு முன்பு கொண்டு வந்திருந்தால் பிழைத்திருக்கலாம். ஆனால், கொஞ்ச நேரத்திற்கு முன்பாக ஏன் மட்டும் கொண்டு செல்ல முடியவில்லை என்பது தான் கேள்வி.
கொஞ்ச நேரத்திற்கு முன்பாக கொண்டு சென்றிருந்தாலும் கூட மருத்துவர் இதே கேள்வியைத் தான் சொல்லியிருப்பார்.

ஏனென்றால், அவருக்கு விதிக்கப்பட்டது அவ்வளவு தான். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான் பிழைப்பார். ஆக இந்த ஐந்தும் கர்ப்பத்தில் இருக்கும்போதே பூர்வ வினைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. இதை மற்றவராலும் மாற்ற முடியாது.

படைத்தான் நமக்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறான். நன்றாக சாப்பிட்டு தூங்கி, எழுந்து, ஆடி ஓடி, விளையாட வைத்திருக்கிறான். குடும்பம், பிள்ளை, குட்டி, சொந்த பந்தம், செல்வம், செல்வாக்கு என்று எல்லாமே குறைவின்றி அள்ளி அள்ளிக் கொடுத்து இருக்கிறான்.

அந்த வழியாக செல்லும் போது அவருக்கு இதை செய்துவிட்டு செல் என்று படைத்தவனால் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நீ செய்தால் புண்ணியமும், செய்யாமல் சென்றால் பாவக் கணக்கும் உன்னை வந்து பற்றிக் கொண்டிருக்கிறது. தன்னால் முடியாமல் தான் ஒருவர் உன்னிடம் கேட்கிறார். கொடுக்க கூடிய வசதி இருந்தாலும், நீ கொடுக்காமல் அவரை மதிக்காமல் செய்து உன்னுடைய பாவக் கணக்கில் அதனை சேர்த்துக் கொள்கிறாய்.

கொஞ்ச நாட்கள் வாழ்ந்தாலும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து மற்றவர்களை சந்தோஷப்படுத்தி வாழ்ந்து விட்டு செல்வோம். அது தான் அவனால் படைக்கப்பட்ட வாழ்க்கை. அதுதான் வாழ்க்கையின் அர்த்தமும் கூட.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =

Most Popular