கருங்காலியின் பயன்கள்!
நோய், திருஷ்டி, தோஷம் என பலவற்றை நீக்கும் கருங்காலியின் பயன்கள்…
கருங்காலியை நாம் அணிவதால் நம் உடலில் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
ஆன்மீக பூஜை பொருட்களில் அரிதான, முக்கியமான ஒன்று தான் கருங்காலி. இந்த கருங்காலியை மாலையாக, காப்பாக, தாயத்து, கைச்செயின் வளையலாக, இப்படி பல விதங்களில் அணியலாம். இதன் பூ, பட்டை , வேர், மற்றும் பிசின் ஆகிய அனைத்தும் மருந்துவ குணம் நிறைந்து காணப்படுகிறது. கருங்காலியை நம் உடலில் அணிவதால் என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
இந்த கருங்காலி மாலையை ஆண்கள், பெண்கள் என்ற பேதமின்றி அனைவரும் அணியலாம். இப்படி அணிவதால் உடம்பில் இருக்கும் கெட்ட சக்திகள் மற்றும் எதிர் மறை ஆற்றல்களை கட்டுப்படுத்தும். இந்த கருங்காலியானது நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவானுக்குரியது. இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் கருங்காலி அணிவதால் நமக்கு கிடைக்கும்.
கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் அதனால் தான் அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகத்திலும் கருங்காலி கட்டைகளை கோபுர கலசங்களில் உள்ளே போடுவார்கள். இதனால் கோயிலை சுற்றி வசிக்கும் மக்களை இடி மின்னல் போன்றவற்றால் எந்த பாதிப்பும் ஏற்பாடமல் இந்த கலசங்கள் கவசங்களாக மாறி காக்கும். இந்த மரத்தின் நிழலில் அமர்ந்தால் கூட நோய் அனைத்தும் நீங்கும் வல்லமை பெற்றது.
இந்த கருங்காலியை நாம் அணிவதால் உடலின் இரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டும் திறன் பெற்றது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்கிறது.
ஆண்,பெண் மலட்டுத் தன்மையை நீக்கி குழந்தை பாக்கியத்தை கொடுக்கும். பெண்கள் இதனை அணிந்து கொள்வதால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். ஆண்கள் இதனை அணிவதால் அவர்களின் ஆண்மை சக்தி அதிகரித்து உடலை உறுதியாக வைக்கிறது. உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு ஏற்படும். கருங்காலியை அணிவதன் மூலம் கோபங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உணர முடியும். மன பயத்தை நீக்கி தைரியத்தைக் கொடுக்கும்.
திக்கி திக்கி பேசுபவர்கள் இதனை அணிந்து வந்தால் நல்ல பேச்சு திறமை வரும். தொழில் செய்பவர்கள் கருங்காலி கட்டையை தொழில் விருத்தி அடையும். நிலங்கள் வாங்க வழிவகை செய்யும். விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். வாகனங்களில் இதனை கட்டுவதால் விபத்துகள் ஏற்படுவதை தடுத்து, நமது பயணங்களை பாதுகாக்கும். தவிர நெருப்பின் பயம் போக்கி அதிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமணம் விரைவில் நடைபெறும். சகோதர , சகோதரி பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குளிர்ச்சி தன்மை கொண்ட இது உடலுக்கும், பற்களுக்கும் வலிமையை தரும்.கருங்காலி கட்டையானது கசப்பும் துவர்ப்பும் கலந்த சுவையை கொண்டுள்ளது. தவிர எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டது.
வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான மற்றும் வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த வகையில் கருங்காலிக் கட்டையானது மிகப் பழமையான ஒன்றாகும்.கருங்காலி கட்டையை தண்ணீரில் ஊற வைத்தால் அதன் நிறம் மாறும்.அந்த நிறம் மாறிய தண்ணீரில் குளித்து வர உடலில் இருக்கும் எல்லா வலிகளும் நீங்கும்.
குலதெய்வம் அருள் கிடைக்கும்.
நேர்மறை எண்ணங்கள்
காரிய சித்தி
தொழில் வளர்ச்சி
கணவன் மனைவி ஒற்றுமை
கடன் தீர்வு
குழந்தை பாக்கியம்
நவகிரக தோஷ நிவர்த்தி
உடல் ஆரோக்கியம்
மற்றும் பல்வேறு மருத்துவ. குணங்கள் பெற்றது.
மஹாளயம் சிறப்பு:
மறு பிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன. சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது.
இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.
பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது. ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.
சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது. தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது.
மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின் பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல்…. போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள். இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.
இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.
அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.
நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.
நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர்.
நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது.
ஆதலால் தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டு விடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.
