Tuesday, October 17, 2023
HomeAstrological Remediesதிங்கட்கிழமை தேங்காய் பரிகாரம்!

திங்கட்கிழமை தேங்காய் பரிகாரம்!

திங்கட்கிழமை தேங்காய் பரிகாரம்!

வாழ்க்கையில் கஷ்டத்தை மட்டுமே தொடர்ந்து அனுபவித்து சலிப்புடன் இருப்பவர்கள் ஒரே ஒரு முறை கீழ்க்கண்ட தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள் கஷ்டம் படிப்படியாக விலகுவதை அனுபவபூர்வமாக உணரலாம். ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை 15 தேங்காய்களை வாங்கி வீட்டில் பூஜை அறையில் வைக்கவும்..

மறுநாள் திங்கட்கிழமை காலை குளித்து முடித்து பூஜை அறையில் வாங்கி வைத்திருக்கும் ஒரு தேங்காயை எடுத்து உங்கள் தலையை மூன்று முறை சுற்றி அந்த தேங்காயுடன் அருகில் உள்ள விநாயகர் கோயில் சென்று சிதறுதேங்காய் உடைத்துவிட்டு மூன்றுமுறை வலம்வந்து விநாயகரை வலம் வந்து வணங்கி வீட்டுக்கு வந்துவிட்டு பிறகு அன்றைய வேலைகளை தொடங்க வேண்டும்.

அடுத்த நாள் செவ்வாய்கிழமை இதே போல் செய்யவேண்டும் அப்போது இரண்டு தேங்காய் எடுத்து தலைசுற்றி செல்லவேண்டும் புதன்கிழமை மூன்று தேங்காய் வியாழன் நான்கு கடைசியாக வெள்ளிக்கிழமை ஐந்து தேங்காய் சிதறுகாய் போட்டுவிட்டு அன்று விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை அல்லது அருகம்புல் மாலை அணிவித்து விநாயகரை வழிபடவேண்டும்…உங்கள் கஷ்டங்களை ஆனைமுகன் போக்குவார். தேங்காயை கிழக்கு முகமாக நின்று தலையை சுற்றவேண்டும்…

ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவன், மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டே இருக்கின்றது. ஒற்றுமை இல்லை என்றால் அதற்கு ஆன்மிக ரீதியாக என்ன வழிபாடு செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை விரதம்

இந்த பூஜையை வாரந்தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டும். வீடு மற்றும் பூஜையறையை சுத்தம் செய்துவிட்டு, முருகனின் திருவுருவ படத்தை வாசனை மிகுந்த பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பூஜையறையில் மா இலையை வைத்து, அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவேண்டும். தீபத்துக்கு பக்கத்தில் ஒரு பூவை வைத்துவிடுங்கள். இந்த தீபத்தை முருகப்பெருமானை முழுக்க முழுக்க மனதில் நினைத்துக் கொண்டு, குடும்ப ஒற்றுமைக்காக ஏற்ற வேண்டும்

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடும், சண்டையும் வரக்கூடாது என்ற வேண்டுதலை அந்த முருகப்பெருமானிடம் வையுங்கள். அப்படியே சண்டை சச்சரவுகள், வாக்குவாதம் வந்தாலும், உங்களுடைய குடும்பத்திற்காக, உங்களுக்கு விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை வர வேண்டும் என்று முருகனிடம் மனமுருகி வேண்டுதலை வைக்க வேண்டும்.

சுயநலம் பார்க்காமல், நம்முடைய குடும்பத்திற்காக, நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மனதார, இந்த பூஜையை தொடங்கிய நாள் முதலில் இருந்தே உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் குறைய ஆரம்பித்துவிடும். ஒற்றுமை அதிகரிக்கும்.

இந்த பூஜையை தொடர்ந்து வீட்டில் செய்துவரும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி உங்களையே அறியாமல் உங்களுடைய மனப்பக்குவம் மாறி, விட்டுக்கொடுக்கும் தன்மை ஏற்பட்டு, கிரக சூழ்நிலைகள் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கூட அது சரியாகி கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்.

வாரந்தோறும் வரும் செவ்வாய்க் கிழமைகளில் மா இலையை மட்டும் புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்படியாக உங்களுக்கு பிரச்சனை தீரும் வரை அல்லது வாழ்நாள் முழுவதும் கூட உங்கள் வீட்டு பூஜையறையில், செவ்வாய்க்கிழமைகளில் இப்படி வழிபாடு செய்து வருபவர்களுக்கு குடும்பத்தில் பிரச்சனை வந்தால் கூட, அது பிரிவை உண்டாக்காது.

RELATED ARTICLES

Most Popular