Saturday, October 28, 2023
HomeArthamulla Aanmeegamஉப்பு தீபத்தின் நன்மைகள்!

உப்பு தீபத்தின் நன்மைகள்!

உப்பு தீபத்தின் நன்மைகள்!

சிறிய பூஜை செய்யக்கூடிய தாம்பூல தட்டில் கல் உப்பை பரப்பி, அதன்மேல் அகல் விளக்கு ஒன்றை புதிதாக வைத்து, 2 பஞ்சு திரி இட்டு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தான் உப்பு தீபம் ஆகும். உப்பின் மீது எரியும் ஜோதிக்கு சக்தி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் மற்ற தீபங்களை காட்டிலும் உப்பு தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் அதிகமானதாக இருக்கும்.

உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்கும் பகைவர்கள் தொல்லை நீங்க, வெள்ளிக்கிழமை தோறும் உப்பு தீபம் ஏற்றலாம். எவ்வளவு குடைச்சலை உங்களுக்கு பகைவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவர்களை செயல்படாமல் செய்துவிடும் இந்த உப்பு தீப வழிபாடு. அதற்காக மனதில் வஞ்சம் வைத்துக் கொண்டு எந்த ஒரு பரிகாரத்தையும் செய்யக்கூடாது. வஞ்சம் இல்லாத, துன்பம் நீங்க கூடிய வகையில் உங்கள் பிரார்த்தனைகள் இருந்தால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும்.

பணப் பிரச்சினையில் கஷ்டப்படுபவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தொழில் விருத்தி உண்டாக, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர, பதவி உயர்வு கிடைக்க, மனதில் நினைத்த விஷயங்கள் நடைபெற, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற, பிள்ளை வரம் வேண்டுபவர்கள், மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில் உப்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை. மற்றவர்களை அழிக்கும் நோக்கத்துடனும், சுயநல எண்ணத்துடனும் உப்பு தீப வழிபாடு செய்தால் எதிர்வினையையும் சந்திப்பீர்கள்.

சிறிய பூஜை செய்யக்கூடிய தாம்பூல தட்டில் கல் உப்பை பரப்பி, அதன்மேல் அகல் விளக்கு ஒன்றை புதிதாக வைத்து, 2 பஞ்சு திரி இட்டு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தான் உப்பு தீபம் ஆகும். உப்பின் மீது எரியும் ஜோதிக்கு சக்தி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் மற்ற தீபங்களை காட்டிலும் உப்பு தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் அதிகமானதாக இருக்கும்.

நேர்த்திக்கடனை எங்கு செலுத்த வேண்டும்?

எந்த கோயிலுக்கு நேர்ந்துகொண்டோமோ அந்த ஆலயத்தில்தான் அதற்கான நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும். திருப்பதிக்கு நேர்ந்துகொண்டு திருநெல்வேலியிலேயே நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு எதற்காக திருப்பதிக்கு வருவதாக நேர்ந்துகொள்ள வேண்டும்? துன்பம் சூழும் நேரத்தில் மனதிற்கு பட்டதை நேர்ந்து கொண்டுவிடுகிறோம். வேண்டுதல் நிறைவேறிய பின்பு அதனை செலுத்துவதற்கு மட்டும் ஆயிரத்தெட்டு விதிவிலக்குகளை எதிர்பார்க்கிறோம். பிரார்த்தனை செய்யும்போதே நம்மால் எதனைச் செய்ய இயலுமோ அதனை மட்டுமே நேர்ந்துகொள்ள வேண்டும். வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்ந்துகொண்டதை சரிவர செய்துவிட வேண்டும். ஒரு ஆலய நேர்த்தியை மற்றொரு ஆலயத்தில் நிறைவேற்றுவது என்பது முற்றிலும் தவறு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =

Most Popular