Tuesday, October 24, 2023
HomeArthamulla Aanmeegamசெவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவதால் என்ன பலன்?

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவதால் என்ன பலன்?

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவதால் என்ன பலன்?

சாம்பிராணியில் இருக்கும் தெய்வாம்சம்:

வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும். வில்வம் மற்றும் வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது. மேற்கண்ட பொருட்களை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள். இப்படி செய்யும் பொழுது வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள், திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படும்.

குடும்பத்தில் அமைதி நிலவும்:

ஏவல், பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும், நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும், எதிரிகள் தொல்லை, இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்.கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும். வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும். வீண் சண்டை, அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவை அகலும். நோய் தொல்லை நீங்கும் எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.

பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால், வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும். எதிர்மறை எண்ணங்களை குறைக்கும். நம் இல்லத்தில் வாரம் ஒருமுறையாவது இந்த சாம்பிராணி போடும் பொழுது வெண்கடுகை அதில் தூவி விடவேண்டும். மேலும் இந்த சாம்பிராணி யை தொழில் செய்யும் இடங்களில் போடுவதால் வியாபாரம் செழிக்கும்.

கண் திருஷ்டி நீங்க:

சிறிதளவு கையில் வெண்கடுகை எடுத்து கொண்டு வீட்டில் இருப்பவர்களை வரிசையாக கிழக்கு பார்த்து உட்கார வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு வலமிருந்து இடமாக மூன்று முறையும், இடமிருந்து வலமாக மூன்று முறையும் திருஷ்டி எடுக்க வேண்டும். பின்னர் புகைத்துக் கொண்டிருக்கும் சாம்பிராணியில் அதனை போட்டால் படபடவென்று வெடிக்க ஆரம்பித்து விடும். எந்த அளவிற்கு வெண்கடுகு வெடிக்கிறதோ, அந்த அளவிற்கு உங்கள் மேல் இருக்கும் பொறாமை பார்வைகள், திருஷ்டிகள் அனைத்தும் விலகும் என்பார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =

Most Popular