Saturday, October 14, 2023
HomeSlogamநினைத்தது நிறைவேற சொல்ல வேண்டிய துர்க்கை அம்மன் துதி!

நினைத்தது நிறைவேற சொல்ல வேண்டிய துர்க்கை அம்மன் துதி!

நினைத்தது நிறைவேற சொல்ல வேண்டிய துர்க்கை அம்மன் துதி!

வாழ்க்கையில் நமக்கு இருக்கும் கஷ்டங்கள் நீங்கவும், நாம் நினைத்த காரியம் நிறைவேறவும் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை மனதார வழிபட வேண்டும். அதுமட்டுமின்றி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சம் பழம் கொண்டு தீபம் ஏற்றி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய்க்கிழமையோ, வெள்ளிக்கிழமையோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ கோயிலுக்கு சென்று துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வைத்து வழிபட 9 வாரங்களில் நாம் நினைத்த காரியம் நிறைவேறும்.

பூஜை நேரம்:

ஞாயிறு – மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
செவ்வாய் – மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை
வெள்ளி – காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

ராகு கால துர்கா அஷ்டகம்…

வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத்தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உலகை யீன்றவள் துர்க்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக்காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்திய மானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
செம்மையானவள் துர்க்கா ஜெயமுமானவள்
ஆம்மையானவள் அன்புத் தந்தை யானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
உயிருமானவள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமை யானவள்
பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையு மானவள் இன்பத் தோனி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவு மானவள் துர்க்கா திரிசூலி யானவள்
திலகமாய் என்றும் திகழும் துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே
அன்னை துர்க்கையே! என்றும் அருளும் துர்க்கையே!
அன்பு துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
கன்னி துர்க்கையே! இதயக் கமல துர்க்கையே!
கருணை துர்க்கையே! இதயக் கமல துர்க்கையே!
கருணை துர்க்கையே! வீர சுகுண துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே ஜெய தே
ஜெய தேவி துர்க்கையே

மந்திரம் உச்சரிக்கும் முறை…

துர்க்கை அம்மனின் துதியை பாடும் போது முதலில் அகல் விளக்கேற்றி வைக்க வேண்டும். அதன் பிறகு தான் புஷ்பம் வைத்து துதி பாட தொடங்க வேண்டும். எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வைத்தால் இன்னும் சிறப்பு. தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே! என்ற நாமம் பாடும் ஒவ்வொரு முறையும் கையெடுத்துத் வணங்க வேண்டும். இப்பாடலை பாடிக்கொண்டே அடிமேல் அடி வைத்து 7 முறை துர்க்கை அம்மனை வலம் வந்து முடித்தல் வேண்டும்.

இப்படி தொடர்ந்து 9 வாரங்கள் செய்து வர நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே போற்றி! போற்றி…!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 9 =

Most Popular