Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegamமாசி மகத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

மாசி மகத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

மாசி மகத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

  1. சிவன் தனது திருவிளையாடல்களை அரங்கேற்றியது மாசி மாதத்தில் தான்.
  2. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுதத்து மாசி மகத்திருநாளில் தான்.
  3. மாத மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாக கருதப்படுகிறது.
  4. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது இந்த மாசி மகம் தான்.
  5. குலசேகர ஆழ்வார் அவதரித்தது மாசி மாதம் வரும் புனர்பூச நட்சத்திரம்.
  6. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷம். அந்த நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
  7. மாசி மாத த்தில் தான் பார்வதி தேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காக தோன்றினாள்.
  8. மாசி மாத பூச நட்சத்திரம் நாளன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.
  9. உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அதனை தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
  10. மாசி மகத்தன்று காமதகன் விழா நடைபெறுகிறது.
  11. காரடையான் நோன்பு மற்றும் சாவித்ரி விரதமும் இந்த மாதத்தின் விசேஷ விரதங்கள்.
  12. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். இந்த மாதத்தில் புது வீடு கிரகப் பிரவேசம் செய்யலாம்.
  13. மாசி மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.
  14. மாசி மக நாளில் புனித நீராடல் செய்ய முடியாதவர்கள் மாசி மக புராணம் படிக்கலாம்.
  15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
  16. மாசி மக நாளில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் என்று பெயர்.
  17. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
  18. மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
  19. மாசி சுக்லபட்ச பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + one =

Most Popular