Friday, October 27, 2023
HomeArthamulla Aanmeegamகண்களை மூடிக் கொண்டு தான் இறைவனை வழிபடனுமா?

கண்களை மூடிக் கொண்டு தான் இறைவனை வழிபடனுமா?

கோயிலில் கண்களை மூடிக் கொண்டு தான் இறைவனை வழிபடனுமா?

கண்களை மூடிகொண்டு ஏன் இறைவனை வணங்ககூடாது தெரியுமா?

நமசிவாய வாழ்க சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

சிலர் கோயிலுக்கு செல்கிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக்கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள். தீபாரதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி நின்று வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் இப்படி இறைவனை வழிபாடு செய்யலாமா? என்று கேட்டால் வழிபாடு செய்யக் கூடாது.

Also Read This: குரு பெயர்ச்சி பலன் 2023 – வீடியோ!

கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்ய வேண்டும். இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுக்க வேண்டும். இறைவனின் ஆடை அணிகலன்களை ரசிக்க வேண்டும். இறைவன் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படைய வேண்டும். ஏனென்றால், நீங்கள் மூலவர் முன் செல்லும் போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம். அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்து விடலாம்.

எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய். நான் உன்னை தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய். உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே இறைவனை காண செல்ல வேண்டும்.

தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எப்படி? – வீடியோ

இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை. நம்மைப் படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும். எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து பார்த்து தரிசனம் செய்ய வேண்டும். அழகில் மயங்குங்கள். அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறாய். இறைவா, எனக்கு எது தேவையோ, அதை மட்டும் கொடுத்துவிட்டு தேவையில்லாதவற்றை நீயே எடுத்துக் கொள் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

மேலும் இறைவா நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்ய வேண்டும். பின்னர் தினசரி பூஜையின் போது, கோயிலில் தரிசித்த இறைவனின் திருவுருவத்தை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்வது தான் உண்மையான வழிபாடு ஆகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + nine =

Most Popular