Saturday, October 28, 2023
HomeHealthy Recipesபச்சை பயிறு சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்?

பச்சை பயிறு சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்?

உணவில் பச்சை பயிற்றை சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன?

பருப்பு வகைகளில் அதிகளவில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். பச்சைப் பயிறு மற்றும் பாசிப் பயிறை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொண்டால், ஏராளமான நன்மைகள் உண்டாகும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

பச்சைப் பயிறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சருமத்திற்கு மிகவும் பயனளிக்கிறது. சரி, இன்றையப் பதிவில் பச்சைப் பயிறு அல்லது பாசிப்பருப்பை உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

உடல் எடையை குறைத்து, சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் பச்சைப் பயிறு எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமானால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் எடையை குறைக்க, ஒரு பவுல் பச்சைப் பயிறை சப்பாத்தி சாப்பிடும் போது சேர்த்துக் கொள்ளலாம். இதனால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதோடு, உடல் எடையும் குறையும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பச்சைப் பயறு உதவியாக இருக்கும். பச்சைப் பயறை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கும்.

தினந்தோறும் பச்சைப் பயிறு அல்லது பாசிப்பயிறை உணவில் சேர்த்து வந்தால் சரும புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. பச்சைப் பயிறில் வைட்டமின் ஏ, பி, இ ஆகியவை உள்ளது. அரிசியும், சிறு பயறும் சேர்த்து கஞ்சியாக உண்ணப்படுகிறது.

சிறிதளவு மஞ்சள், 2 ஸ்பூன் பச்சை பயறு மாவு, 1/4 ஸ்பூன் குப்பை மேனி இலைப்பொடி, பசும்பால் ஆகியவற்றை கலந்து பெண்கள், முகத்தில் தடவி வர வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் முடி வளர்வது தடுக்கப்படும். மேலும், முகமும் பொலிவு பெறும் என்பது ஐதீகம்.

பக்கவாதம் ஏற்படுவதற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் கெட்ட கொழுப்புகளின் செயல்பாடு முக்கிய காரணமாக அமைகிறது. ஆதலால், தினந்தோறும் பாசிப்பயிறு எடுத்துக் கொண்டால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும். ஏனென்றால், பாசிப்பயிறில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்புகள் சேருவதை தடை செய்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − three =

Most Popular