Saturday, October 28, 2023
HomeArthamulla Aanmeegamபிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்கள்!

பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்கள்!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்கள்!

குருவை நாம் வழிபடுவதால் கல்வி, செல்வம், உத்தியோகம் போன்ற அனைத்திலும் நாம் சிறந்து விளங்கலாம் . இப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போவது, தமிழ்நாட்டில் உள்ள ப்ரசித்தி பெற்ற குரு ஸ்தலங்கள்.

குரு பகவான் வழிபாட்டு முறை:
குரு பகவானின் அருள் கிடைக்க ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் குரு பகவானை தரிசித்து வரலாம். வியாழக் கிழமையில் விரதம் இருந்து, நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.

1. மேதா தட்சிணாமூர்த்தி:
திருச்செந்தூர் குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர் களைக் காக்க முருகப்பெருமான் அசுரர் களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார்.

இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப் படுகிறது. இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானை களுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலது கையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தி யின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவ சியம் ஒரு முறையாவது சென்று வரவேண் டிய தலம் இது.

2. மேற்கு நோக்கி அருள்பாளிக்கும் குரு ஸ்தலம்:

சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோவில், குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.

3. ராஜகுரு பகவான்:
தென்குடி திட்டை திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ் டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்ப தாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.

4. சுயம்பு மூர்த்தியாக குரு பகவான்:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ‘மிருத சஞ்சீவினி’ மந்திரம் கற்றிருந்தார். இத னால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திர த்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியா ரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவ தாகச் சொன்னான். அதன்படி சுக்ராச் சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந் தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச் சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

கசனைக் காணாத தேவயானி, தந்தை யிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந்து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.

5. வியாழன் ஸ்தலம்:
ஆலங்குடி நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங் களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தலத்துச் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் உள்ளார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம் – குரு தட்சிணாமூர்த்தி என்பதால், இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர். தட்சிணா மூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான். வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. தேவர் களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ‘ஆலங்குடி’ என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவருக்கும் எவ்விதத் தீங்கும் உண் டாவதில்லை என்று சொல்லப்படுகிறது.

6. ஆல மரத்துடன் அருள்புரியும் குரு பகவான்:

பட்டமங்கலம் கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பட்டமங் கலத்தில் அருளுகிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக் கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 – 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − six =

Most Popular