Saturday, October 28, 2023
HomeArthamulla Aanmeegamமாசி வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் அதிர்ஷ்டம் ஓடிவிடும்!

மாசி வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் அதிர்ஷ்டம் ஓடிவிடும்!

மாசி வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் அதிர்ஷ்டம் ஓடிவிடும்!

பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே அதிர்ஷ்டம் தான். எந்த வேலையாக இருந்தாலும் வெள்ளிக்கிழை நல்ல நாள். அன்னிக்கு செய்து கொள்வோம் என்று தான் எல்லோருமே சொல்வார்கள். இந்த நாளில் எந்தவித கெட்ட விஷயங்களும் செய்ய மாட்டார்கள். ஒருவேளை கெட்ட விஷயங்கள் செய்ய ஆரம்பித்தால், அதிர்ஷ்டமும், செல்வமும் நம்மை விட்டு விலக ஆரம்பித்துவிடும். மகாலட்சுமிக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை. நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக செல்வம் தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களை கடைப்பிடித்து வர வேண்டும்.

பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால் லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாக சென்று விடுவாள். எந்த அளவிற்கு நமது வீடு தூய்மையாகவும், சுத்தமாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு திருமகள் வீடு முழுவதும் நிறைந்திருப்பாள்.
வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் செய்யக் கூடாத விஷயங்கள் என்று நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களை வகுத்து வைத்திருக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் மறந்தும் செய்யாதீங்க. அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே இதையெல்லாம் நீங்க இதுநாள் வரையில் செய்து வந்திருந்தால், அதுவே கூட உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இத்தனைக் காலங்களும் இருந்திருக்கலாம்.

எவ்வளவு சம்பாதித்தாலும், பொருள் வீடு வந்து சேரலை. நிரந்தரமாக செல்வம் தங்காமல் கடனில் தத்தளிக்கிறேன் என்று ஏராளமானோர் புலம்புவது உண்டு. நிரந்தரமாக செல்வம் தங்காமல் கடனில் தத்தளிக்கிறேன் என்று சிலர் புலம்புவதைத் பார்த்திருப்போம். வெள்ளிக்கிழமையில் பணம் கடன் கொடுப்பது கூடவே கூடாது. கூடுமானவரை வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். நம்மில் நிறைய பேர் வெள்ளிக்கிழமைகளில் தான் அவசரம் என்று தலையை சொரிந்து கொண்டு, நம்மிடம் கடன் கேட்டு வந்து நிற்பதை கவனித்திருக்கலாம். அது 10 ரூபாயோ, 100 ரூபாயோ வெள்ளிக் கிழமைகளில் கடன் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

அதே போல் வெள்ளிக்கிழமைகளில் அரிசியை வறுப்பதும், புடைப்பதும் கூடாது. பச்சரிசியில் மகாலட்சுமி தேவி வாசம் செய்வாள். இரவு நேரங்களில் பால், தயிர், பச்சைக்காய்கள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல் கூடாது. கடன் கொடுத்தல் இரண்டுமே கூடவே கூடாது. வெள்ளிக்கிழமைகளில் பால் பொங்கி கீழே வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்கு வைத்த பிறகு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, தலை வாருதல், பேன் பார்த்தல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. பெரும்பாலும், பெண்கள் வெள்ளிக் கிழமைகளில் தலைக்கு குளித்து விட்டு, தலை காய வைக்கிறோம் என்று தலைவிரி கோலத்துடன் இருப்பார்கள். அதற்கென நேரம் ஒதுக்கி, தலையைக் காய வைத்து விட்டு, பின்னர் வேறு வேலையில் ஈடுபடுங்கள். தலை முடியை வெள்ளிக் கிழமைகளில், தலைவிரி கோலமாய் இருத்தல் கூடாது.

விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக் கூடாது. காலை அல்லது மாலை நேரங்களில் வீட்டில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, விளக்கேற்றக் கூடாது.
வெள்ளிக்கிழமைகளில் நகம், முடி போன்றவற்றை வெட்டக் கூடாது. பூஜையின் போது, விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. இதை எல்லா நாளிலுமே கடைப்பிடிக்கலாம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யவே செய்யாதீங்க. துண்டைக் கட்டிக் கொண்டோ, துண்டை தோளில் போட்டுக் கொண்டோ, ஈர ஆடைகளுடன் சாமி கும்பிடக் கூடாது.

தேங்காயை, பூஜைக்கு படைக்கும் போது, உடைக்கும் சமயத்தில் எதிர்பாரா விதமாக இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை எக்காரணம் கொண்டும் சாமிக்கு படைக்கக் கூடாது. இயற்கை பூக்களுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − one =

Most Popular